மனு பாக்கருக்கு நீடா அம்பானி வாழ்த்து 
தற்போதைய செய்திகள்

மனு பாக்கருக்கு நீடா அம்பானி வாழ்த்து!

ஒலிம்பிக் துப்பாக்கிச்சுடுதலில் பதக்கம் வென்ற முதல் இந்தியப் பெண் என்ற பெருமையை பெற்ற மனு பாக்கருக்கு நீடா அம்பானி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

DIN

ஒலிம்பிக் துப்பாக்கிச்சுடுதலில் பதக்கம் வென்ற முதல் இந்தியப் பெண் என்ற பெருமையை பெற்ற மனு பாக்கருக்கு நீடா அம்பானி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கு முதல் பதக்கம் வென்றுக்கொடுத்த மனு பாக்கருக்கு சர்வதேச ஒலிம்பிக் சம்மேளன உறுப்பினரும், ரிலையன்ஸ் அறக்கட்டளையின் தலைவருமான நீடா அம்பானி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

துப்பாக்கிச்சுடுதல் மகளிர் பிரிவில் இந்தியாவின் மனு பாக்கர் 221.7 புள்ளிகளுடன் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 28) வெண்கலப் பதக்கம் வென்றார். இதன்மூலம் பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கு முதல் பதக்கம் கிடைத்துள்ளது.

இந்த நிலையில், பாரீஸ் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற மனு பாக்கருக்கு ஒலிம்பிக் சம்மேளன உறுப்பினர் நீடா அம்பானி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், பாரீஸ் ஒலிம்பிக் போட்டி 2024 -இல் நமது இளம் பெண் மூலம் இந்தியாவின் பதக்க கணக்கு தொடங்கியுள்ளது. மகளிருக்கான 10 மீட்டர் துப்பாக்கி சுடுதல் போட்டியில் 221.7 புள்ளிகளுடன் வெண்கலம் வென்றதன் மூலம் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற முதல் இந்திய பெண் துப்பாக்கி சுடும் வீராங்கனை என்ற வரலாறு படைத்துள்ளார் மனு பாக்கர். மகளிருக்கான 10 மீட்டர் துப்பாக்கி சுடுதல் பிரிவில் வெண்கலம் வென்று இந்தியாவின் பதக்கப்பட்டியலைத் தொடக்கிவைத்த மனு பாக்கருக்கு மனமார்ந்த வாழ்த்துகள். “இன்றைய உங்கள் வெற்றி, இந்தியா முழுவதும் உள்ள இளம் விளையாட்டு வீரர்களை பெரிய கனவு காண ஊக்குவிக்கும்" என நான் நம்புகிறேன் என்று நீடா அம்பானி தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மறுசீரமைப்பு ஆணையை ரத்து செய்ய வலியுறுத்தி ஆா்ப்பாட்டம்

ரயில்வே மேம்பாலம் பராமரிப்பு பணி: எம்எல்ஏ ஆய்வு

திருந்திய நெல் சாகுபடியில் அதிக மகசூல் பெறும் விவசாயிக்கு விருது: ஆட்சியா்

அமெரிக்க செயற்கைக்கோளை டிச. 24-இல் ஏவுகிறது இஸ்ரோ

மின்சாரம் பாய்ந்து கட்டுமானத் தொழிலாளி உயிரிழப்பு

SCROLL FOR NEXT