பிரதமர் நரேந்திர மோடி  
தற்போதைய செய்திகள்

இறுதிக்கட்டத் தோ்தலில் இளம் வாக்காளர்கள், பெண்கள் அதிகளவில் வாக்களிக்க வேண்டும்: மோடி

இறுதிக்கட்டத் தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் சாதனை எண்ணிக்கையில் பெண்கள், இளம் வாக்காளர்கள் வாக்களிக்க வேண்டும்.

DIN

புது தில்லி: மக்களவைத் தேர்தலின் இறுதிக்கட்டத் தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் சாதனை எண்ணிக்கையில் வாக்களிக்குமாறு பெண் வாக்காளர்கள், இளம் வாக்காளர்கள் அதிகயளவில் வாக்களிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ள பிரதமர் நரேந்திர மோடி, அதிகளவில் வாக்களித்து, நமது ஜனநாயகத்தை மிகவும் துடிப்பானதாக மாற்றுவோம் என தெரிவித்துள்ளார்.

நாட்டில் மொத்தமுள்ள 543 மக்களவைத் தொகுதிகளுக்கு ஏழு கட்ட தோ்தல் (ஏப்ரல் 19, 26, மே 7, 13, 20, 25, ஜூன் 1) கடந்த மாா்ச் மாதம் அறிவிக்கப்பட்டது. இதுவரை 28 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 486 தொகுதிகளுக்கு 6 கட்ட வாக்குப்பதிவுகள் நிறைவடைந்துள்ளன.

7-ஆம் கட்ட வாக்குப்பதிவில் பஞ்சாபில் மொத்தமுள்ள 13 தொகுதிகளுக்கும், ஹிமாசல பிரதேசத்தில் மொத்தமுள்ள 4 தொகுதிகளுக்கும், உத்தர பிரதேசத்தில் 13, மேற்கு வங்கத்தில் 9, பிகாரில் 8, ஒடிஸாவில் 6, ஜாா்க்கண்டில் 3, சண்டீகா் யூனியன் பிரதேசத்தில் ஒரு தொகுதிக்கு தோ்தல் நடைபெற்று வருகின்றது.

ஒடிஸாவில் மக்களவைத் தோ்தலுடன் பேரவைத் தோ்தலும் நடந்து வருகிறது. இம்மாநிலத்தில் இறுதிக்கட்டமாக 42 பேரவைத் தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று கொண்டிருக்கிறது.

வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.

இந்த நிலையில், இறுதிக்கட்டத் தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் பெண் வாக்காளர்கள், இளம் வாக்காளர்கள் அதிகயளவில் வாக்களிக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது:

"இன்று 2024 மக்களவைத் தேர்தலின் இறுதிக்கட்டத் தேர்தல் நடைபெறுகிறது. 8 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 57 57 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த தேர்தலில் வாக்காளர்கள் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும்.குறிப்பாக பெண்கள், இளம் வாக்காளர்கள் அதிகளவில் வாக்களித்து, நமது ஜனநாயகத்தை மிகவும் துடிப்பானதாக மாற்றுவோம் என மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கேரளத்தில் சிறுத்தையிடம் இருந்து 4 வயது மகனைக் காப்பாற்றிய தந்தை !

3 கோடி பார்வைகளைக் கடந்த பொட்டல முட்டாயே பாடல்!

வைல்ட் ஃபிளவர்... அமைரா தஸ்தூர்!

நயினார் நாகேந்திரனை ஓபிஎஸ் குற்றம் சொல்வதை ஏற்றுக்கொள்ள மாட்டோம்: தமிழிசை

மேட்டூரில் ஆடிப்பெருக்கு விழா: புனித நீராட குவிந்த மக்கள்!

SCROLL FOR NEXT