வாரந்தோறும் திரையரங்குகளில் புதுப்புது திரைப்படங்கள் வெளியாகி கொண்டுதான் இருக்கின்றன. தங்களது விருப்ப நடிகரின் திரைப்படத்தை பார்க்க ரசிகர்கள் ஆவலோடு திரையரங்கங்களுக்கு சென்று கொண்டுதான் இருக்கிறார்கள்.
அந்தவகையில், இந்த வாரம் திரையரங்குகளில் எந்தெந்த திரைப்படங்கள் வெளியாகவுள்ளன என்பதைக் காண்போம்.
சவாரி, வெள்ளை ராஜா ஆகிய படங்களை இயக்கிய குகன் சென்னியப்பன் இயக்கயத்தில் சத்யராஜ், வசந்த் ரவி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘வெப்பன்’. இப்படம் ஜூன் 7 ஆம் தேதி வெளியாகிறது.
நீண்ட இடைவேளைக்குப் பிறகு, நடிகர் மோகன் மீண்டும் நாயகனாக களமிறங்கும் திரைப்படம் 'ஹரா'. இந்த படத்தை இயக்குநர் விஜய் ஸ்ரீ ஜி இயக்கியுள்ளார். ஹரா திரைப்படம் ஜூன் 7 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
விதார்த் மற்றும் வானி போஜன் நடிப்பில் உருவாகியுள்ள அஞ்சாமை திரைப்படம் நாளை(ஜூன் 7) வெளியாகிறது.
சோனியா அகர்வால், வனிதா விஜயகுமார் பிரதான பாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் தண்டுபாளையம். இப்படம் நாளை(ஜூன் 7) வெளியாகவுள்ளது.
ஹரிஹரன் இயக்கத்தில் அஜய் பாலகிருஷ்ணன் மற்றும் ஸ்வேதா ஷ்ரிம்ப்டன் நடித்துள்ள 'இனி ஒரு காதல் செய்வோம்' திரைப்படம் ஜூன் 7 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
இதனைத் தொடர்ந்து, கமல்ஹாசன், மனிஷா கொய்ராலா நடித்த 'இந்தியன்' திரைப்படம் இந்த வாரம் ரீ-ரிலீஸ் செய்யப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.