தற்போதைய செய்திகள்

தில்லியில் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலையில் தீ: 3 பேர் பலி, 6 பேர் காயம்

உணவு பதப்படுத்தும் தனியார் தொழிற்சாலை ஒன்றில் சனிக்கிழமை அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் 3 தொழிலாளர்கள் பலியாகினர் மற்றும் 6 பேர் காயமடைந்தனர்

DIN

புது தில்லி: தில்லி நரேலா தொழிற்சாலை பகுதியில் உள்ள உணவு பதப்படுத்தும் தனியார் தொழிற்சாலை ஒன்றில் சனிக்கிழமை அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் 3 தொழிலாளர்கள் பலியாகினர் மற்றும் 6 பேர் காயமடைந்தனர் என்று தில்லி காவல்துறை தெரிவித்துள்ளது.

தில்லி நரேலா தொழிற்சாலை பகுதியில் உள்ள உலர் மூங்கில் பருப்பை பதப்படுத்தும் தனியார் தொழிற்சாலை ஒன்றில் சனிக்கிழமை அதிகாலை 3 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதையடுத்து காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து 14 தீயணைப்பு வாகனங்களுடன் வந்த தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இந்த தீ விபத்தில் தொழிற்சாலையில் பணியில் இருந்த ஷ்யாம் (24), ராம் சிங் (30), பீர்பால் (42) ஆகிய 3 தொழிலாளர்கள் பலியாகினர், 9 பேர் மீட்கப்பட்டு நரேலாவில் உள்ள எஸ்எச்ஆர்சி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறினார்.

மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

பருப்பு வறுக்க பயன்படுத்தப்படும் பர்னர்களுக்கு செல்லும் எரிவாயு பைப்பில் எரிவாயு கசிந்ததால் தீ விபத்து ஏற்பட்டு, தீ மளமளவென தொழிற்சாலை முழுவதும் பரவியதால், கம்ப்ரசர் அதிக வெப்பமடைந்து வெடித்தால் தீ விபத்து ஏற்பட்டுள்ளது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

தீ விபத்து குறித்து போலீசார் வழக்குப் பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விடுதலைப் போராட்ட வீரர்களுக்கான ஓய்வூதியம் உயர்வு! அரசாணை வெளியீடு!

பிரிட்டனின் அரச நெறிமுறைகளை மீறினாரா அதிபர் டிரம்ப்?

தேர்தல் ஆணையம் குற்றச்சாட்டுகளை நிராகரிக்கிறது; ஆனால், பதில் எங்கே? - காங்கிரஸ் கேள்வி

விஜய்யின் சுற்றுப் பயண பிரச்னையிலேயே குட்டிக்கரணமிடும் தவெக: அண்ணாமலை விமர்சனம்

புரட்டாசி மாதப் பலன்கள் - மீனம்

SCROLL FOR NEXT