தேவர்சோலை பகுதியில் வனத் துறை வைத்த கூண்டில் சிக்கிய சிறுத்தை. 
தற்போதைய செய்திகள்

கூடலூர் அருகே மக்களை அச்சுறுத்திய சிறுத்தை கூண்டில் சிக்கியது!

நீலகிரி மாவட்டம் கூடலூர் அடுத்துள்ள தேவர்சோலை பகுதியில் மக்களை அச்சுறுத்திய சிறுத்தை வனத் துறை வைத்த கூண்டில் சனிக்கிழமை காலை சிக்கியது.

DIN

கூடலூர்: நீலகிரி மாவட்டம் கூடலூர் அடுத்துள்ள தேவர்சோலை பகுதியில் மக்களை அச்சுறுத்திய சிறுத்தை வனத் துறை வைத்த கூண்டில் சனிக்கிழமை காலை சிக்கியது.

நீலகிரி மாவட்டம் கூடலூர் அடுத்துள்ள தேவர்சோலை பகுதி தேவன் எஸ்டேட் அதன் சுற்றுப்புற கிராமங்களில் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்குள் கடந்த நான்கு நாள்களாக பொதுமக்களை அச்சுறுத்தி வந்தது.

இந்த சிறுத்தையை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்தனர்.

கூண்டில் சிக்கியது சிறுத்தை.

இதையடுத்து, கடந்த புதன்கிழமை முதல் அந்தப் பகுதியில் தேடுதல் பணியை தொடங்கிய வனத்துறையினர், சிறுத்தை கிடைக்காத நிலையில் அந்தப் பகுதியில் கூண்டு வைத்து கண்காணித்து வந்தனர்.

இந்த நிலையில், சனிக்கிழமை காலை கூண்டில் சிக்கியது சிறுத்தை.

இதையடுத்து முதுமலை புலிகள் காப்பக கால்நடை மருத்துவர் ராஜேஷ் குமாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அவர் வந்தவுடன் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

4 சுங்கச் சாவடிகள்: 50% கட்டணத்தை செலுத்த தமிழ்நாடு அரசு முடிவு! - நீதிமன்றத்தில் தகவல்

ஐஐடி மும்பையில் விடுதியின் கட்டடத்தில் இருந்து குதித்து மாணவர் தற்கொலை

நான் துரோகம் செய்யவில்லை, தற்கொலைக்கு முயன்றேன்..! விவாகரத்து பற்றி சஹால்!

மாலை மலர்ந்த ஊதா... அம்ரிதா ஐயர்!

மோடியின் கைப்பாவையாக மாறிய தேர்தல் ஆணையம்: கார்கே குற்றச்சாட்டு!

SCROLL FOR NEXT