யோகா பயிற்சி விடியோவில்... 
தற்போதைய செய்திகள்

பிரதமர் மோடி பகிரும் யோகாசனப் பயிற்சி விடியோக்கள்!

யோகா நாளையொட்டி எக்ஸ் தளத்தில் யோகாசன பயிற்சி விடியோக்களைப் பகிரத் தொடங்கியுள்ளார் பிரதமர் மோடி!

இணையதளச் செய்திப் பிரிவு

எக்ஸ் தளத்தில் யோகாசனப் பயிற்சி விடியோக்களைப் பகிரத் தொடங்கியிருக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி.

அரசியல்சார் பதிவுகளையே தன் பக்கத்தில் பெரும்பாலும் வெளியிட்டுவரும் பிரதமர் நரேந்திர மோடி, தற்போது யோகாசன பயிற்சி விடியோக்களைப் பகிர்ந்துள்ளார்.

ஜூன் 11 தேதிய பதிவில் யோகா நாள் நெருங்கிவரும் வேளையில், பல்வேறு ஆசனங்களைப் பற்றிய பயிற்சி வழிகாட்டல் மற்றும் அவற்றின் பலன்களைப் பற்றிய விடியோக்களைப் பகிர்வதாகக் குறிப்பிட்டு, ‘பிரதமர் மோடியுடன் யோகா’  (யோகா வித் பிஎம் மோடி) என்று தலைப்பிட்ட யூ டியூப் விடியோக்கள் இணைப்பு (யூ டியூப் பிளே லிஸ்ட்) ஒன்றையும் இணைத்திருக்கிறார்.

இந்தப் பட்டியலில் 16 ஆசனங்கள், ஆங்கிலத்திலும் ஹிந்தியிலுமாக இரு விடியோக்கள் வீதம் 32 விடியோக்கள் இடம் பெற்றுள்ளன.

இதன் தொடர்ச்சியாக, நேற்று (ஜூன் 12) விருக்-ஷாசன பயிற்சி விடியோவைத் தனியே (ஆங்கிலத்திலும் ஹிந்தியிலுமாக) பகிர்ந்துள்ளார் நரேந்திர மோடி.

ஏதோ ஒரு நாள் மட்டும் என்று நினைத்தால், இன்று அடுத்த விடியோவை - தாடாசன பயிற்சி விடியோவைப் - பகிர்ந்திருக்கிறார் நரேந்திர மோடி.

இந்த விடியோக்களில் குறிப்பிட்ட ஆசனத்தைப் பற்றி விளக்குவதுடன் நரேந்திர மோடியின் உருவத்தை முப்பரிமாண அனிமேஷனில் சித்திரித்து, இந்த யோகாசனத்தை எப்படி செய்ய வேண்டும் என்றும் செய்து காட்டப்படுகிறது. தொடர்ந்து, இந்த ஆசனத்தைச் செய்வதால் கிடைக்கக் கூடிய பலன்களும் விவரிக்கப்படுகின்றன.

ஜூன் 21 – பன்னாட்டு யோகாசன நாள்.

அதுவரையிலும் தொடர்ந்து இந்தப் யோகாசனப் பயிற்சி அனிமேஷன் விடியோக்களைப் பிரதமர் மோடி வெளியிடுவார் என்றே தோன்றுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்னை, புறநகரில் பரவலாக மழை!

கர்நாடகத்தில் எஸ்.சி. பிரிவில் உள்ஒதுக்கீடு: 1,766 பக்க ஆய்வறிக்கை சமர்ப்பிப்பு!

ஆதித்யா பிர்லா கேபிடல் நிறுவனத்தின் லாபம் அதிகரிப்பு!

ஓவல் டெஸ்ட்டில் இதயங்களை வென்ற கிறிஸ் வோக்ஸ்!

தவெக மாநாட்டில் மாற்றம்! புதிய தேதி நாளை அறிவிப்பு!

SCROLL FOR NEXT