முகப்பு
தற்போதைய செய்திகள்

சத்தீஸ்கரில் நக்சல்கள் வெடிகுண்டு தாக்குதலில் 2 வீரர்கள் காயம்

சத்தீஸ்கரின் நாராயண்பூர் மாவட்டத்தில் நக்சல்கள் புதைத்து வைத்திருந்த வெடிகுண்டு வெடித்ததில், இந்தோ-திபெத்திய எல்லைக் காவல்படை வீரர்கள் இரண்டு பேர் காயமடைந்தனர்.

Updated On : 14 ஜூன், 2024 at 6:41 AM
மாதிரி கோப்புப்படம்
பகிர்:

நாராயண்பூர்: சத்தீஸ்கரின் நாராயண்பூர் மாவட்டத்தில் நக்சல்கள் புதைத்து வைத்திருந்த வெடிகுண்டு வெடித்ததில், இந்தோ-திபெத்திய எல்லைக் காவல்படை வீரர்கள் இரண்டு பேர் காயமடைந்தனர்.

இச்சம்பவம் சுமார் 6 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

சத்தீஸ்கரின் நாராயண்பூர் மாவட்டம் கோகமேட்டா காவல் நிலையப் பகுதிக்கு உட்பட்ட குதுல் கிராமத்திற்கு அருகில் உள்ள வனப்பகுதியில் இந்தோ-திபெத்திய எல்லைக் காவல்படையின் 53 ஆவது பட்டாலியின் வீரர்கள் வெள்ளிக்கிழமை காலை 6 மணியளவில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, நக்சல்கள் புதைத்து வைத்திருந்த வெடிகுண்டு வெடித்ததில் 2 வீரர்கள் காயமடைந்தனர்.

காயமடைந்த வீரர்கள் இரண்டு பேரும் அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தொடர்ந்து பாதுகாப்புப் படையினர் தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

முழு கட்டுரையைப் படிக்க →