சென்னை: கள்ளக்குறிச்சி கள்ளச்சாரய மரணம் மற்றும் தமிழ்நாட்டில் மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி ஜூன் 24 ஆம் தேதி விசிக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என விசிக தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்த 52 பேர் இறந்துள்ளனர். 114-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.
இந்த சம்பவத்திற்கு அரயில் கட்சி தலைவர்கள கண்டனம் தெரிவித்ததோடு,மருத்துவமனைகளி சிகிச்சை பெற்று வருவோரை நேரில் சென்று பார்வையிட்டு ஆறுதல் மற்றும் உதவிகளையும் அறிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், கள்ளச்சாராயம் குடித்து கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை வியாழக்கிழமை நேரில் சந்தித்து உடல்நலம் குறித்து கேட்டறிந்து ஆறுதல் கூறினார். மேலும் உரிய சிகிச்சை அளிக்குமாறு மருத்துவர்களிடம் அறிவுறுத்தினார்.
உயிரிழந்த வீரசோழபுரம் செல்வம் மனைவி அர்ச்சனா, மாடூர் கண்ணன் மனைவி கிரிஜா, சிறுவங்கூர் கோபால் என்கிற செல்வம் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறியதுடன் விசிக சார்பில் அவர்களது குடும்பத்தினருக்கு தலா ரூ.10,000 நிதியுதவி வழங்கினார்.
இந்தநிலையில், அவர் தனது முகநூல் பக்க பதிவில், கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணத்தில் தொடர்புடைய அதிகார வர்க்கத்தினர் உள்ளிட்ட அனைவரையும் கைது செய்ய வேண்டும். முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவதே இந்த கொடுமையைத் தடுக்கும் நிரந்தரத் தீர்வு!
எனவே தமிழ்நாட்டில் முழு மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி சென்னையில் வரும் 24 ஆம் தேதி மாலை 3 மணியளவில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.