தேர்தல் நடத்தும் அலுவலரான மு.சந்திரசேகரிடம் தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்த கனியாமூர் பள்ளியில் உயிரிழந்த மாணவி ஶ்ரீமதியின் தாயார் கே.பி.செல்வி (40). 
தற்போதைய செய்திகள்

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: கனியாமூர் பள்ளி மாணவி ஸ்ரீமதியின் தாயார் வேட்புமனு தாக்கல்

விக்கிரவாண்டி தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிட கனியாமூர் பள்ளியில் உயிரிழந்த மாணவி ஸ்ரீமதியின் தாயார் செல்வி வெள்ளிக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தார்.

DIN

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிட கனியாமூர் பள்ளியில் உயிரிழந்த மாணவி ஸ்ரீமதியின் தாயார் செல்வி வெள்ளிக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தார்.

விக்கிரவாண்டி தொகுதி இடைத் தோ்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 14-ஆம் தேதி தொடங்கியது.

ஜுலை 10 - ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில், ஜூன் மாதம் 14 ஆம் தேதி மனுதாக்கல் தொடங்கியது. வியாழக்கிழமை வரை 24 வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்திருந்தனர்.

கடைசி நாளான வெள்ளிக்கிழமையும் மனு தாக்கல் பெறப்பட்டது.

இதில் 2022 ஜூலை 12-ஆம் தேதி கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூர் பள்ளியில் உயிரிழந்த மாணவி ஶ்ரீமதியின் தாயார் கே.பி.செல்வி (40), கணவர் ராமலிங்கத்துடன் வந்து தேர்தல் நடத்தும் அலுவலரான மு.சந்திரசேகரிடம் தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார்.

பின்னர்,தனது குழந்தைக்கு ஏற்பட்ட கஷ்டம் மற்ற குழந்தைகளுக்கு ஏற்படக் கூடாது என்பதற்காகத் தான் தேர்தலில் போட்டியிடுவதாக செல்வி தெரிவித்தார்.

இது போல், தமிழ்நாடு மது குடிப்போர் விழிப்புணர்வு சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலர் எம்.எஸ். ஆறுமுகம் (58), விதவைக் கோலம் போல வெள்ளை சேலை அணிந்து வந்தும், நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டைச் சேர்ந்த அகிம்சா சோஷலிஸ்ட் கட்சியின் தி.ரமேஷ் , காந்தியவாதி போன்று வேடம் அணிந்து வந்து வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

”காங்கிரஸ் செய்த துரோகம்! பராசக்தி படக்குழுவுக்கு வாழ்த்துகள்” அண்ணாமலை பேட்டி

அடுத்த 2 மணி நேரத்துக்கு 6 மாவட்டங்களில் மழை!

திமுக ஆட்சியில் அரசு மருத்துவமனையில் கூட பாதுகாப்பு இல்லை: அண்ணாமலை

"WE SHALL COME BACK!" பாதையை விட்டு விலகியது Pslv-C62! ISRO தலைவர் வி. நாராயணன்

ஜன. 23-ல் பிரதமர் மோடி தமிழகம் வருகை! ஒரே மேடையில் என்டிஏ கூட்டணி கட்சித் தலைவர்கள்!

SCROLL FOR NEXT