ஊழியர்கள் தாமதமாக அலுவலகம் வந்தால் அரை நாள் விடுப்பாக கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு ஊழியர்கள் அனைவரும் காலை 9.15 மணிக்குள் அலுவலகத்துக்கு பணிக்கு வர வேண்டும் என்றும், இதில் 15 நிமிடங்கள் சலுகை நேரமும் அடங்கும் என்றும், மத்திய அரசு பணியாளர்கள் மற்றும் பயிற்சித்துறை வெளியிட்ட சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், காலை 9.15-க்குள் வருகையை பயோமெட்ரிக் சாதனத்தில் கை ரேகையை பதிவு செய்ய வேண்டும் என்று மத்திய அரசு ஊழியர்கள் அனைவருக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஊழியர்கள் காலை 9.15 மணிக்குள் வராவிட்டால், அவர்களுக்கு அரை நாள் சாதாரண விடுப்பாக கழிக்கப்படும் என்று சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மத்திய அரசு அலுவலகங்கள் காலை 9 மணி முதல் மாலை 5:30 மணி வரை செயல்படுகின்றன.
'தாமதமாக வருதல் மற்றும் முன்கூட்டியே அலுவலகத்தை விட்டு செல்வது குறித்து கவனித்து அதை தடுக்கப்பதற்கான நடவடிக்கை எடுக்கலாம்' என சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கரோனாவால் நிறுத்தப்பட்ட பயோமெட்ரிக் பதிவை மீண்டும் தொடங்க வேண்டும் என்ற உத்தரவு கடந்த 2022-ல் மத்திய அரசு அறிக்கை வெளியிட்டது.
இந்த அறிக்கையின் படி, ஒரு குறிப்பிட்ட நாளில் அலுவலகத்திற்கு வர முடியாத நிலை ஏற்பட்டால், ஊழியர்கள் முன்கூட்டியே தகவல் தெரிவிக்க வேண்டும், அதற்காக ஒரு சாதாரண விடுப்பு விண்ணப்பிக்கப்பட வேண்டும் என்று சுற்றறிக்கையில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
அலுவலக நேரத்தையும் தாண்டி வேலை செய்வதாகவும், டிஜிட்டல் கோப்புகளை வீட்டுக்கு எடுத்து சென்று வேலை செய்வதாகவும் தெரிவித்துள்ள மத்திய அரசு ஊழியர்கள், இந்த அறிவிப்பு சற்று அதிருப்தி ஏற்படுத்தியுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.