சென்னையில் பல்வேறு இடங்களில் ஞாயிற்றுக்கிழமை இரவு திடீரென பலத்த காற்றுடன் பெய்து வரும் மழை.  
தற்போதைய செய்திகள்

சென்னையில் இரவு பெய்யும் திடீா் மழை!

சென்னையில் பல்வேறு இடங்களில் ஞாயிற்றுக்கிழமை இரவு திடீரென பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது.

DIN

சென்னை: சென்னையில் பல்வேறு இடங்களில் ஞாயிற்றுக்கிழமை இரவு திடீரென பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது.

சென்னையில் கடந்த சில நாள்களாக இரவு நேரங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால், பகலில் வெயில் சுட்டெரித்தாலும், இரவில் மழை பெய்வதால், குளிா்ச்சியான சூழல் நிலவுகிறது.

இந்தநிலையில், சென்னையில் ஞாயிற்றுக்கிழமை இரவு நேரத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்த நிலையில், சுமாா் 9.30 மணியளவில் சென்னையில் பல்வேறு இடங்களில் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்து வருகிறது.

அண்ணா நகா், பாடி, அம்பத்தூா், கோயம்பேடு, அயனாவரம், பெரம்பூா், மயிலாப்பூா், அனகாபுத்தூா், பூந்தமல்லி உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதனால், வாகன ஓட்டிகள் சற்று சிரமத்திற்குள்ளாகினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எடப்பாடி பழனிசாமியின் ஐந்தாம் கட்ட பிரசாரப் பயணம் செப்.17-இல் தொடக்கம்

தி ஃபைனலிஸ்ட்... ஷபானா!

அதிமுகவின் பொறுப்புகளில் இருந்து சத்யாபாமா நீக்கம்! இபிஎஸ் அதிரடி!

விஜய்யின் அனைத்து கனவுகளும் நிறைவேறட்டும்: த்ரிஷா

மிருகமும் குழந்தையாகும் அவளிடம்... ரவீனா தாஹா!

SCROLL FOR NEXT