30 அடி உயர மரத்தில் ஏறியிருந்த மலைப்பாம்பு. 
தற்போதைய செய்திகள்

30 அடி உயர மரத்தில் ஏறியிருந்த மலைப்பாம்பு! பத்திரமாக மீட்டு காட்டில் விட்டனர்!

பொள்ளாச்சி அருகே விவசாய தோட்டத்தில் 30 அடி உயர மரத்தில் ஏறியிருந்த மலைப்பாம்பை பத்திரமாக மீட்டு காட்டில் விடப்பட்டது.

DIN

பொள்ளாச்சி அருகே விவசாய தோட்டத்தில் 30 அடி உயர மரத்தில் ஏறியிருந்த மலைப்பாம்பை பத்திரமாக மீட்டு வனத்துறை முன்னிலையில் காட்டில் விடப்பட்டது.

பொள்ளாச்சியை அடுத்த அம்பராம் பாளையம் அருகில் உள்ள ஒரக்கலியூர் என்ற கிராமத்தில் சுமார் 30 அடி மரத்தின் மேல் ஏறிய மலைபாம்பு, மரக்கிளையில் தஞ்சம் அடைந்தது.

இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த தோட்டத்தின் உரிமையாளர் குணசேகரன் வனத்துறையினருக்கு தகவல் அளித்தார்.

இந்த நிலையில், வனத்துறையினரின் வழிகாட்டுதலின் பேரில் அங்கு சென்ற பாம்பு பிடி வீரரும், புகைப்படக் கலைஞருமான சுரேஷ், மரத்தின் மீது ஏறி மலைப்பாம்பை லாவகமாகப் பிடித்தார்.

பின்னர், அந்த மலைப்பாம்பினை ஆழியாறு குரங்கு அருவி அருகேயுள்ள அடர்ந்த வனப்பகுதியில் பத்திரமாக விடப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

3-ம் நாளாக சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு! ஆனால் ஐடி, ஆட்டோ, பார்மா பங்குகள் சரிவு!

நிதியமைச்சர் தாக்கல் செய்த பொருளாதார ஆய்வறிக்கையின் முக்கிய அம்சங்கள்!

சாம்பியன்ஸ் லீக்கில் 100% வெற்றியுடன் வரலாறு படைத்த ஆர்செனல்!

யு19 உலகக் கோப்பை: ஜோரிச் வான் சதம் விளாசல்; இலங்கைக்கு 262 ரன்கள் இலக்கு!

தனுஷின் 55 ஆவது படத்துக்கு இசையமைக்கும் சாய் அபயங்கர்!

SCROLL FOR NEXT