தற்போதைய செய்திகள்

கள்ளச்சாராய விவகாரம்: ஆளுநரை சந்தித்த அதிமுக எம்எல்ஏக்கள்!

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம் தொடர்பாக ஆளுநர் ஆர்.என். ரவியை அதிமுக எம்எல்ஏக்கள் சந்தித்து மனு அளித்துள்ளனர்.

DIN

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம் தொடர்பாக ஆளுநர் ஆர்.என். ரவியை அதிமுக எம்எல்ஏக்கள் சந்தித்து மனு அளித்துள்ளனர்.

கேள்வி நேரத்திற்கு முன்பாக கள்ளச்சாராய சம்பவத்தை விவாதிக்கக்கோரி அதிமுகவினர் அமளியில் ஈடுபட்டனர். மேலும், கள்ளக்குறிச்சி விவகாரத்தில் சிபிஐ விசாரணை வேண்டும் என்று அதிமுகவினர் முழக்கங்களை எழுப்பினர்.

பேரவைத் தலைவர் அப்பாவுவின் உத்தரவின் பேரில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, ஆர்.பி. உதயகுமார் உள்ளிட்ட அதிமுக எம்எல்ஏக்கள் வெளியேற்றப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து, சட்டப்பேரவை நடவடிக்கையில் அதிமுகவினர் பங்கேற்க ஒரு நாள் தடை விதித்து சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு உத்தரவிட்டார்.

பேரவையில் இருந்து புறப்பட்டு அதிமுக எம்எல்ஏக்களுடன் ஆளுநர் மாளிகைக்குச் சென்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, கள்ளக்குறிச்சியில் நடந்த கள்ளசாராய மரணங்கள் தொடர்பாக சிபிஐ விசாரணைக் கோரி ஆளுநர் ஆர்.என். ரவியிடம் மனு அளித்தார்.

இந்த சந்திப்பின்போது, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியுடன், முன்னாள் அமைச்சர்கள் முனுசாமி, தங்கமணி, வேலுமணி, சி.வி. சண்முகம் உள்ளிட்டோரும் உடனிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முயற்சியே வலிமை!

தன்னாட்சித் தத்துவம்தான் வெளியுறவுக் கொள்கை!

கோயிலில் இரு ஏழை ஜோடிகளுக்கு இலவச திருமணம்

நீண்டகால போருக்கு முப்படைகள் தயாராக வேண்டும்- ராஜ்நாத் சிங்

விளையாட்டில் அரசியல் !

SCROLL FOR NEXT