தற்போதைய செய்திகள்

மக்களவையில் நீட் பற்றி பேசும்போது ராகுல் காந்தியின் மைக் அணைப்பு!

மக்களவையில் நீட் விவகாரம் குறித்து கேள்வி எழுப்பும்போது ராகுல் காந்தியின் மைக் அணைக்கப்பட்டதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.

DIN

மக்களவையில் நீட் விவகாரம் குறித்து கேள்வி எழுப்பும்போது எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் மைக் அணைக்கப்பட்டதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.

நீட் முறைகேடு குறித்து பேச வலியுறுத்தி இந்தியா கூட்டணிக் கட்சிகளின் எம்பிக்கள் பலர் மனு அளித்திருந்தனர். நீட் முறைகேடு தொடர்பாக உடனே விவாதம் நடத்த மக்களவையில் கோரிக்கை வைக்கப்பட்டது.

மேலும், குடியரசுத் தலைவர் தீர்மானத்தை ஒத்திவைக்கக் கோரியும் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன.

இந்த நிலையில், நீட் விவகாரம் தொடர்பாக விவாதம் நடத்த வேண்டும் என்றும், அதற்கு அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் ராகுல் காந்தி மக்களவையில் வலியுறுத்தினார்.

மக்களவையில் ராகுல் காந்தி பேசிக்கொண்டிருந்தபோது அவரது மைக் அணைக்கப்பட்டதாக, காங்கிரஸ் தன்னுடைய எக்ஸ் தளப் பக்கத்தில் குற்றம் சாட்டியுள்ளது. மேலும், இதன் தொடர்பான விடியோவொன்றையும் வெளியிட்டுள்ளது.

இதற்கு மக்களவையில் மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா பதலளித்து பேசுகையில், உறுப்பினர்களின் மைக்கை நான் அணைப்பதில்லை எனவும், அத்தைகைய உரிமை எனக்கு இல்லை என்றும் அவர் தெளிவுப்படுத்தினார்.

மேலும், 'நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் உரை தொடர்பான விவாதமே நடைபெற வேண்டும். பிற விஷயங்கள் குறித்து பேச அனுமதி கிடையாது,' என்று பிர்லா கூறினார்.

"ஒரு பக்கம், பிரதமர் நரேந்திர மோடி நீட் விவகாரம் குறித்து ஏதுவும் பேசாமல் இருக்கிறார், அதே நேரத்தில் இளைஞர்களின் குரலாக எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேசும்போது அவரது மைக் அணைக்கப்படுகிறது.

இத்தகைய முக்கியமான விவகாரத்தில், மைக் அணைப்பது போன்ற மலிவான செயல்களால் இளைஞர்களின் குரலை ஒடுக்க சதி செய்யப்படுகிறது” என்று காங்கிரஸ் தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கோட்டை 7 முக்தி அளிக்கும் சக்தி பீடங்கள்...!

சென்னிமலை முருகனுக்கு பாலாபிஷேக பெரு விழா

அதிக லாபத்துடன் இயங்கும் சுப்ரமணிய சிவா கூட்டுறவு சா்க்கரை ஆலை

ஒகேனக்கல்லில் ஆடிப் பெருக்கு விழா: ரூ. 1.07 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவி அமைச்சா் வழங்கினாா்

‘எண்ணும் எழுத்தும்’ திட்டம்: கண்காணிப்பு அதிகாரிகளுக்கு பள்ளிக் கல்வித் துறை உத்தரவு

SCROLL FOR NEXT