FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

நாட்டின் பாதுகாப்பு பற்றி ராகுல் பேசும்போது சிரித்த காங்கிரஸ் எம்.பி.க்கள்!

மக்களவையில் தேசிய பாதுகாப்பு குறித்து ராகுல் காந்தி பேசத் தொடங்கியபோது காங்கிரஸ் உறுப்பினர்கள் சிரித்த விடியோ இணையத்தில் வைரல்.

Updated On : 2 பிப்ரவரி 2026, 6:19 pm IST
மக்களவையில் பேசிய ராகுல் காந்தி - படம் - சன்சத்
பகிர்:

மக்களவையில் தேசிய பாதுகாப்பு குறித்து ராகுல் காந்தி பேசத் தொடங்கியபோது, காங்கிரஸ் உறுப்பினர்கள் சிரித்த விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.

தங்கள் கட்சித் தலைவர் பேசும்போது ஏன் சிரிக்கிறீர்கள்? என அவைத் தலைவர் கேட்டதற்கு ராகுல் காந்தி பதில் அளித்து, தனது உரையைத் தொடர்ந்தார்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 28 ஆம் தேதி தொடங்கியது. நடப்பாண்டின் முதல் கூட்டத் தொடர் என்பதால் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு உரையாற்றினார்.

Advertisement

Advertisement

குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் இன்று (பிப். 2) முதல் பிப். 4 வரை நடைபெறுகிறது. மக்களவையில் தேசிய பாதுகாப்பு குறித்தும், எல்லை ஆக்கிரமிப்பு குறித்தும் ராகுல் காந்தி கேள்வி எழுப்பினார். இதற்கு ராஜ்நாத் சிங் பதில் அளித்துப் பேசினார்.

ராகுல் காந்தி பேச வாய்ப்பு கேட்டு பல முறை மறுக்கப்பட்டு, அதன் பிறகே அவருக்கு பேச வாய்ப்பு கிடைத்துள்ளது. இதனை சுட்டிக்காட்டி பேசிய ராகுல் காந்தி, ''நான் கடந்த இரண்டு மணிநேரமாக ஒரு விஷயத்தைப் பற்றி பேசத் துடிக்கிறேன். அது மிகவும் முக்கியமானது. அது வேறு ஒன்றுமில்லை தேசிய பாதுகாப்பு குறித்துதான்'' எனக் குறிப்பிட்டார். அப்போது காங்கிரஸ் உறுப்பினர்கள் பலரும் சிரித்தனர்.

இதனை சுட்டிக்காட்டிய அவைத் தலைவர், ''தேசிய பாதுகாப்பு குறித்து பேசும்போது, அதுவும் உங்கள் தலைவரைப் பார்த்து நீங்கள் சிரிப்பது ஏன்?'' எனக் கேள்வி எழுப்பினார். இந்த விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.

summary

Rahul gandhi speak on National Security Congress MPs are laughing viral video

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments