கொலை செய்யப்பட்ட கருப்பசாமி 
தற்போதைய செய்திகள்

தூத்துக்குடி அமுதா நகரில் இளைஞர் வெட்டிக் கொலை

தூத்துக்குடி அமுதா நகரை சேர்ந்த தங்கமுத்து மகன் கருப்பசாமி (26).

DIN

தூத்துக்குடி: தூத்துக்குடி அமுதா நகரில் இளைஞர் ஒருவரை ஞாயிற்றுக்கிழமை வெட்டிக் கொலை செய்யப்பட்ட மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

தூத்துக்குடி அமுதா நகரை சேர்ந்த தங்கமுத்து மகன் கருப்பசாமி (26).இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த மற்றொரு தரப்பினருக்கும் இடையே கடந்த ஓராண்டுக்கு முன்பே முன்விரோதம் இருந்து வந்துள்ளதாம்.

இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை கருப்பசாமி வீட்டுக்கு வந்த மர்ம நபர்கள் அவரை சரமாரியாக வெட்டி விட்டு தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது.

கொலை நடந்த வீட்டில் விசாரணை மேற்கொள்ளும் போலீசார்.

இதில், பலத்த காயமடைந்த கருப்பசாமி சம்பவ இடத்திலேயே பலியானார்.

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தென்பாகம் போலீஸார், அவரது உடலை கைப்பற்றி உடல் கூறாய்வுக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் சம்பவ நடந்த இடத்தை காவல் உதவி கண்காணிப்பாளர் கேல்கர் சுப்பிரமணிய பாலசந்த்ரா நேரில் பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார்.

இதையடுத்து கருப்பசாமியை கொலை செய்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பைசன் காளமாடன்: மாரி செல்வராஜ் எழுதிய தீக்கொளுத்தி பாடல்!

ஓபிசி இடஒதுக்கீட்டை பாதிக்காமல் மராத்தா பிரிவினருக்கென இடஒதுக்கீடு: மகாராஷ்டிர அமைச்சர்

வண்ணக் கனவுகள்... சங்கவி!

மலர் சூடி... மானசா செளத்ரி!

ஆண் நண்பருடன் தனிமையில் இருந்த பெண் போலீஸ்! திடீரென வீட்டுக்குள் நுழைந்த கணவன்! அப்புறமென்ன..?

SCROLL FOR NEXT