தேர்தல் தேதிகள் அறிவிப்பா? பொய்ச் செய்தி என ஆணையம் தகவல்!
தேர்தல் தேதிகள் அறிவிக்கப்படவில்லை என்றும் பரவுவது பொய்ச் செய்தி என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
2024 மக்களவைத் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டதாக வாட்ஸ் ஆப்பில் பொய்யான செய்தி பகிரப்பட்டு வருவதாகத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
வாட்ஸ் ஆப்பில் பரவிவரும் வதந்தி பற்றி எக்ஸ் வலைத்தளத்தில் இந்தியத் தேர்தல் ஆணையம் குறிப்பொன்றை வெளியிட்டுள்ளது.
இந்தச் செய்தி தவறு. இதுவரையிலும் மக்களவைத் தேர்தல் தேதிகள் தொடர்பாக இந்தியத் தேர்தல் ஆணையம் எவ்வித அறிவிப்பும் வெளியிடவில்லை.
Advertisement
Advertisement
அறிவிக்கப்பட்ட செய்தியாளர்கள் சந்திப்பில் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்படும் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.