சேலம் அருகே மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு: போக்சோவில் ஆசிரியர் கைது
சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே அரசு நடுநிலைப் பள்ளி மாணவிகளிடம் பாலியல் தொந்தரவு அளித்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது பணியில் இருந்து இடைநீக்கம் செய்து கல்வித்துறை நடவடிகக்கை எடுத்துள்ளது.
சேலம் மாவட்டம், ஓமலூர் வட்டம் புதுப்பாளையம் ஊராட்சி, அரிசிபாளையம் அரசு நடுநிலைப் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றி வந்த வெள்ளாளபுரம் கிராமம், பாச்சாலியூா் பகுதியைச் சோ்ந்த பழனியப்பன் (42) பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளாா்.
இதுகுறித்து மாணவியின் பெற்றோா் அளித்த புகாரில் வழக்குப் பதிவு செய்த கொங்கணாபுரம் போலீசா போக்சோ சட்டத்தில் பழனியப்பனைக் கைது செய்து விசாரமை நடத்தி வந்தனர்.
Advertisement
Advertisement
இந்த நிலையில், போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ள ஆசிரியர் பழனியப்பனை பணியிடை நீக்கம் செய்து பள்ளிக்கல்வித் துறை நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.