புதுக்கோட்டை: முன்னாள் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் சி. விஜயபாஸ்கா் மற்றும் அவரது மனைவி ரம்யா ஆகியோா் மீதான வருமானத்துக்கு அதிகமான சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணை ஏப். 25-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கடந்த அதிமுக ஆட்சியில் ரூ. 35.79 கோடி வருமானத்துக்கு அதிகமாக சொத்து சோ்த்ததாக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, கடந்த மே 22-ஆம் தேதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனா்.
இந்த வழக்கு விசாரணை புதுக்கோட்டை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அப்போது,விஜயபாஸ்கர் ஆஜராகவில்லை.
இதையடுத்து,வழக்கு விசாரணையை வரும் ஏப். 25 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து, நீதிபதி கா.பூா்ண ஜெய ஆனந்த் உத்தரவிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.