தற்போதைய செய்திகள்

தகாத உறவால் இளைஞர் கத்தியால் குத்திக் கொலை

25 வயது இளைஞர் சதீஷ்குமாரை கத்தியால் குத்திக் கொலை செய்த பெண் உள்ளிட்ட 2 பேரை தெற்கு காவல் நிலைய போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.

DIN

கம்பம்: தேனி மாவட்டம் கம்பத்தில் தகாத உறவு காரணமாக, 25 வயது இளைஞர் சதீஷ்குமாரை கத்தியால் குத்திக் கொலை செய்த பெண் உள்ளிட்ட 2 பேரை தெற்கு காவல் நிலைய போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.

கம்பம் பாரதியார் நகர் தெற்கு 5 ஆவது தெருவில் வசித்தவர் சுருளிவேல் மகன் சதீஷ்குமார் (25). இவர்,திருமணமாகதவர் கூலிவேலை செய்து வந்தார். இவருக்கும் ஆங்கூர்பாளையம் சாலையில் வசித்து வரும் நந்தினி (31) என்பவருக்கும் பழக்கம் இருந்துள்ளது. 

இந்தசூழ்நிலையில்,நந்தினியுடன் ஏற்கனவே தொடர்பில் இருந்து பிரிந்து சென்ற ஆட்டோ ஓட்டுநர் பிரபாகரன் (27) மீண்டும் நந்தினியிடம் சேர்ந்துள்ளார்.

இந்த நிலையில், சதீஷ்குமார் வெள்ளிக்கிழமை நந்தினியின் வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது, நந்தினியும், பிரபாகரனும் இருந்ததை கண்டு அவர்களிடம் வாக்குவாதம் செய்துள்ளார்.

அப்போது ஆத்திரமடைந்த நந்தினி, பிரபாகரன் ஆகிய இருவரும் சதீஷ்குமாரை தாக்கி கத்தியால் சரமாரியாக குத்தியதில் சதீஷ்குமார் உயிரிழந்தார்.

இது குறித்த தகவல் தெற்கு காவல் நிலையத்திற்கு கிடைத்ததை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆய்வாளர் முத்துலட்சுமி, சதீஷ்குமார் சடலத்தை கைப்பற்றி தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உடற்கூறாய்வுக்கு சனிக்கிழமை ஒப்படைத்தார்.

மேலும் நந்தினி, பிரபாகரன் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மணல் குவாரி திறப்பிற்கான அனுமதியை சுற்றுச்சூழல் துறை ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ்

தேவர் ஜெயந்தி! சசிகலா மரியாதை!

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவருக்கு டிடிவி தினகரன் மரியாதை

ஐவகை அம்புகள் கைவழி ஏந்திட... ஆஷிகா ரங்கநாத்!

பழனிசாமிதான் எங்கள் எதிரி; துரோகத்தை வீழ்த்த இணைந்துள்ளோம்! - ஓபிஎஸ், செங்கோட்டையன், டிடிவி தினகரன்

SCROLL FOR NEXT