கோப்புப்படம் 
தற்போதைய செய்திகள்

பவுனுக்கு ரூ.640 உயர்ந்த தங்கம் விலை!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வியாழக்கிழமை(மே.2) பவுனுக்கு ரூ.640 உயர்ந்து பவுன் ரூ. 53,080-க்கு விற்பனையாகிறது.

DIN

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதன்கிழமை ஒரே நாளில் பவுனுக்கு ரூ.920 குறைந்து பவுன் ரூ. 53,080-க்கு விற்பனையான நிலையில், வியாழக்கிழமை(மே.2)பவுனுக்கு ரூ.640 உயர்ந்து பவுன் ரூ. 53,080-க்கு விற்பனையாகிறது.

சா்வதேச காரணிகளால் தங்கம் விலை தொடா்ந்து ஏற்றம் கண்டு வந்த நிலையில், கடந்த சில நாள்களாக தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது.

அமெரிக்காவில் வட்டி வீத மாற்றம் குறித்த தகவல்கள், டாலரின் மதிப்புயா்வு உள்ளிட்டவைகளால் புதன்கிழமை இந்திய சந்தையில் தங்கம் விலை அதிரடியாக இறங்கியது.

அதன்படி சென்னையில் கிராமுக்கு ரூ.115 குறைந்து ரூ.6,635-க்கும், பவுனுக்கு ரூ.920 குறைந்து ரூ.53,080-க்கும் விற்பனையானது.

இந்த நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வியாழக்கிழமை(மே.2) கிராமுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.6,715-க்கும், பவுனுக்கு ரூ.640 உயர்ந்து ரூ.53,720-க்கும் விற்பனையாகிறது.

அதேபோன்று வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு 50 காசுகள் உயர்ந்து ரூ. 87-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.500 உயர்ந்து ரூ.87,000-க்கும் விற்பனையாகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குடியாத்தம் ஒன்றியத்தில் வளா்ச்சிப் பணிகள் ஆய்வு

வேளாண் இயந்திரங்கள் செயல் விளக்குநா் பயிற்சி

கல் குவாரியை மூடக் கோரி கிராமத்தினா் போராட்டம்

குறைதீா் கூட்டத்தில் 408 மனுக்கள்

வத்தலகுண்டில் விவசாயி கொலை: இருவா் கைது

SCROLL FOR NEXT