தற்போதைய செய்திகள்

அருணாச்சல பிரதேசத்தில் லேசான நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.1 ஆகப் பதிவு!

அருணாச்சல பிரதேச மாநிலத்தில் உள்ள சுபன்சிரியில் புதன்கிழமை காலை 4:55 மணியளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.

DIN

இட்டாநகர்: அருணாச்சல பிரதேச மாநிலத்தில் உள்ள சுபன்சிரியில் புதன்கிழமை காலை 4:55 மணியளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.

இது ரிக்டர் அளவுகோலில் 3.1 ஆகப் பதிவாகியுள்ளது என்று தேசிய புவியியல் ஆய்வு மையம் (என்சிஎஸ்) தெரிவித்துள்ளது.

தேசிய புவியியல் ஆய்வு மையம் அறிக்கையின் படி, புதன்கிழமை காலை சுமார் 4:55 மணியளவில் சுபன்சிரியில் பூமிக்கு அடியில் 10

கி.மீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்த நிலநடுக்கத்தால் சேதங்கள் குறித்த எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஓட்டுநருக்கு திடீர் மாரடைப்பு! கார்கள் மீது மோதிய லாரி! | CBE

”ஏழைகளும் பாஜகவிற்கு சம்பந்தமில்லை!” 100 நாள் வேலைத்திட்டம் பெயர் மாற்றம் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின்

புதுச்சேரியில் நடைபெறுவது தேஜ கூட்டணி அரசுதான்: முதல்வர் ரங்கசாமி

யு-19 ஆசிய கோப்பை: இந்தியாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்ற பாகிஸ்தான்!

இங்கிலாந்தின் தோல்வியை புரிந்துகொள்ள கடினமாக இருக்கிறது: கெவின் பீட்டர்சன்

SCROLL FOR NEXT