கோப்புப்படம்  
தற்போதைய செய்திகள்

சிவகாசி அருகே மீண்டும் வெடிவிபத்து!

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 2 அறைகள் சேதமடைந்தது. நல்வாய்ப்பாக தொழிலாளர்கள் யாரும் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

DIN

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 2 அறைகள் சேதமடைந்தது. நல்வாய்ப்பாக தொழிலாளர்கள் யாரும் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

விருதுநகா் மாவட்டம், சிவகாசி அருகேயுள்ள நாரணாபுரம் புதூரில் காத்தநாடார் தெருவைச் சேர்ந்த ராஜாராம் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை உள்ளது. இந்த ஆலையில் பட்டாசு தயாரிப்புக்கான மூலப்பொருள்கள் தயாரிக்கப்பட்டு ஒரு அறையில் வைக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் அந்த ஆலையில் சனிக்கிழமை காலை 6.15 மணியளவில் வெடி மருந்து மூலப்பொருள்கள் வைத்திருக்கும் அரையில் திடீர் வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் 3 அறைகள் இடிந்து தரைமட்டமாகின.

காலை நேரத்தில் வெடி விபத்து ஏற்பட்ட நிலையில், நல்வாய்ப்பாக தொழிலாளர்கள் யாரும் பணிக்கு வராததால் உயிரிச்சேதம் தவிர்க்கப்பட்டது.

இதுகுறித்து, தவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் பத்து பேர் பலியான சுவடு மறைவதற்கு மீண்டும் ஒரு பட்டாசு ஆலை வெடிவிபத்து நிகழ்ந்துள்ளது.

விருதுநகர் மாவட்டத்தில் இந்த மாதத்தில் மட்டும் ஐந்தாவது முறையாகப் பட்டாசு ஆலையில் வெடி விபத்து நிகழந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

லக்ஷயா ஏமாற்றம்; சாத்விக்/சிராக் ஏற்றம்

31-ஆவது நாளாக போக்குவரத்து ஊழியா்கள் காத்திருப்புப் போராட்டம்

இறுதிச்சுற்றில் நீரஜ் சோப்ரா, சச்சின் யாதவ்

வெண்கலப் பதக்கச் சுற்றில் அன்டிம் பங்கால்

உலக அளவில் சிறந்த 100 வணிக கல்வி நிறுவனங்கள்: பெங்களூரு, அகமதாபாத், கொல்கத்தா ஐஐஎம்கள் இடம்பெற்றன

SCROLL FOR NEXT