முகப்பு
தற்போதைய செய்திகள்

அதிமுகவில் இணைகிறாரா ஓபிஎஸ் ? - ஆர்.பி.உதயகுமார் விளக்கம்

அதிமுகவில் மீண்டும் ஒபிஎஸ் இணைவதாக வெளியான தகவல் தொடர்பாக ஆர்.பி.உதயகுமார் விளக்கம் அளித்துள்ளார்.

Updated On : 19 மே, 2024 at 7:55 AM
பகிர்:

அதிமுகவின் ஒருங்கினைப்பாளராக ஓ.பன்னீர்செல்வமும்,இணை ஒருங்கினைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் கட்சியை வழிநடத்தி வந்த நிலையில்,ஒற்றைத் தலைமை விவகாரம் காரணமாக ஓபிஎஸ் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக பதவியேற்று கட்சியை வழிநடத்தி வருகிறார்.

கட்சியில் இருந்து நீக்கப்பட்ட பிறகு ஓபிஎஸ், அதிமுக உரிமை மீட்பு குழு என்ற பெயரில் செயல்பட்டு வருகிறார். நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைத்து இராமநாதபுரம் தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிட்டார். இதனிடையே ஓ.பன்னீர்செல்வம் மீண்டும் அதிமுகவில் இணையவுள்ளதாக ஒரு தகவல் பரவி வருகிறது.

இந்நிலையில்,மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய எதிர்கட்சித் துணை தலைவர் ஆர்.பி.உதயகுமாரிடம் பத்திரிக்கையாளர் ஒருவர்,அதிமுகவில் ஓபிஎஸ் இணைய போகிறார் என்ற தகவல் ஊடகங்ளில் வெளியாகி வருகிறதே என்ற கேள்வியை முன்வைத்தார்.

அதற்கு பதிலளித்த அவர், அதிமுக பிரிவதற்கு பிள்ளையார் சுழி போட்டவர் ஓபிஎஸ்.தனக்குப் பதவி இல்லை என்பதால் அதிமுகவை பிரிக்க திட்டமிட்டர்.சட்டமன்றத்திலும் அதிமுக அரசுக்கு எதிராக வாக்களித்தார்.இருந்தாலும் கட்சியின் முக்கியத்துவம்,நலன் கருதி மீண்டும் அதிமுகவில் இணைக்ப்பட்டார்.அதிமுகவின் முக்கிய முடிவுகளில் மறுப்பு தெறிவிப்பார் அல்லது மெளனம் காப்பார்.

ஒபிஎஸ் நடவடிக்கைகளால் அதிமுக வளர்ச்சி அடையாமல் பின்னோக்கி சென்றது.நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் இராமநாதபுரம் தொகுதியில் அதிமுகவை எதிர்த்து சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்டார்.இது எந்த வகையில் நியாயம் ?கடந்த மக்களவை தேர்தலில் ரவீந்திரநாத் தேனியில் வெற்றி பெற்றது அதிமுகவின் வெற்றி ஓபிஎஸின் வெற்றி கிடையாது.ஓ.பன்னீர்செல்வம் என்னும் தனிமனிதனின் சுயலாபத்திற்காக அதிமுக மீது பல வழக்குகள் போடப்பட்டது.

அதிமுகவை எடப்பாடி பழனிசாமி தொண்டர்களின் விருப்பத்தின் அடிப்படையில் வழிநடத்தி செல்கிறார்.மக்களவை தேர்தலுக்குப் பிறகு ஓ.பன்னீர்செல்வத்தை அதிமுகவில் சேர்க்க திட்டம் என ஊடகங்களில் வெளியாகும் செய்திகளில் உண்மையில்லை என்று தெரிவித்துள்ளார்

முழு கட்டுரையைப் படிக்க →