டெவோன் கான்வே படம்: எக்ஸ்/சென்னை சூப்பர் கிங்ஸ்
தற்போதைய செய்திகள்

உண்மையான ரசிகர்களுக்கு நன்றி! கான்வே உருக்கம்

சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களுக்கு கான்வே நன்றி...

DIN

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ரசிகர்களுக்கு நியூசிலாந்து வீரர் டெவோன் கான்வே நன்றி தெரிவித்துள்ளார்.

உலகம் முழுவதும் அதிக வரவேற்பு பெற்றுள்ள ஐபிஎல் தொடரில் வரும் 2025 சீசனுக்கு மெகா ஏலம் நடைபெறவுள்ளது. இந்நிலையில் தொடரில் பங்கேற்கும் அணிகள் வீரா்களை தக்க வைத்துக் கொள்ள நேற்று கடைசி நாளாகும்.

வியாழக்கிழமை மாலை அனைத்து அணிகளும் தக்க வைத்துக் கொள்ளும் வீரர்களின் பட்டியலை வெளியிட்டனர். சென்னை அணியும் நேற்று மாலை தக்க வைக்கப்பட்ட வீரர்களின் பட்டியலை வெளியிட்டது.

கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், இந்திய வீரர்கள் ஜடேஜா, ஷிவம் துபே, இலங்கை வீரர் பதிரனா ஆகியோரும் அன்-கேப் வீரராக தோனியையும் தக்க வைத்துள்ளனர்.

இந்த நிலையில், கான்வே தக்க வைக்கப்படாத நிலையில், அவர் வெளியிட்ட பதிவில், ”கடந்த 2 ஆண்டுகளாக அற்புதமான ஆதரவு அளித்த உண்மையான சிஎஸ்கே ரசிகர்களுக்கு நன்றி” என்று பதிவிட்டுள்ளார்.

ஆர்டிஎம் பயன்படுத்தி அல்லது ஏலத்தில் மீண்டும் கான்வேவை சென்னை நிர்வாகம் தக்க வைத்துக் கொள்ளும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கும் நிலையில், சென்னை ரசிகர்களுக்கு அவர் நன்றி தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமலாக்கத் துறை அழைப்பாணை விவகாரம்: ஜாா்க்கண்ட் முதல்வா் நீதிமன்றத்தில் ஆஜா்

பெண்ணிடம் நகை பறித்த சிறுவன் உள்பட மூவா் கைது

குழந்தைகளின் விருப்பத்துக்கு முன்னுரிமை: உயா்நீதிமன்றம் அறிவுறுத்தல்

வெந்நீர் ஊற்று...

ரவிமங்கலத்தில் அகழாய்வு நடத்தக் கோரி வழக்கு: தொல்லியல் துறை ஆணையா் பதிலளிக்க உத்தரவு

SCROLL FOR NEXT