துப்பாக்கி சூடு சம்பவ சிசிடிவி காட்சி படம்: TNIE
தற்போதைய செய்திகள்

தில்லி: துப்பாக்கி சூட்டில் 2 பேர் பலி; ஒருவர் காயம்!

தில்லியில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக...

DIN

தில்லியில் உள்ள ஃபார்ஷ் பஜாரில் வியாழக்கிழமை நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் 2 பேர் பலியாகினர் மற்றும் ஒருவர் காயமடைந்தார்.

தனிப்பட்ட விரோதத்தின் காரணமாக இந்த சம்பவம் நடந்ததாக தில்லி காவல்துறை தெரிவித்துள்ளது. சம்பவ இடத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில், காவல் துறையினர் சிறுவன் ஒருவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவத்தில் ஆகாஷ்(40), அவரது உறவினர் ரிஷப் (16) பலியாகினர். ஆகாஷின் மகன் கிரிஷ்(10) காயமடைந்தார்.

தில்லி காவல் துறையினரின் கூற்றுப்படி, இறந்த ஆகாஷ் மற்றும் அவரது குடும்பத்தினர் மீதும், போலீஸாரால் கைது செய்யப்பட்ட சிறுவன் மீதும் முன்னதாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும், இறந்தவருக்கும், குற்றம் சாட்டப்பட்டவருக்கும் இடையே பணம் தொடர்பாக தகராறு இருந்து வந்துள்ளது.

"நேற்றிரவு 8.30 மணிக்கு எங்களுக்கு வந்த அழைப்பைத் தொடர்ந்து காவலர்கள் குழு சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டது. அந்த குழு சம்பவ இடத்தில் ரத்தக்கறையைக் கண்டனர்" என்று காவல் துறை அதிகாரி தெரிவித்தார்.

அருகில் நின்று கொண்டிருந்த ஆகாஷின் உறவினர் ரிஷப், ஆகாஷின் மகன் கிரிஷ் ஆகியோரும் மீதும் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது.

ஆகாஷ் மற்றும் ரிஷப் ஆகியோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர்கள் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அன்னிய நிதி வெளியேற்றத்தால் சென்செக்ஸ் 519 புள்ளிகள் சரிவுடன் நிறைவு!

சரும அழகைக் கெடுக்கும் பானங்கள்! பளபளப்பான சருமத்திற்கு இதைச் செய்யுங்கள்!

தவறுதலாக 43 ஆண்டுகள் சிறை! இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரை நாடு கடத்தத் தடை

அடியே, அலையே! பராசக்தி முதல் பாடல் புரோமோ!

ஹிந்துஜா குழுமத் தலைவர் கோபிசந்த் காலமானார்

SCROLL FOR NEXT