சென்னையில் காலை முதலே பரவலாக மழை 
தற்போதைய செய்திகள்

சென்னையில் பரவலாக மழை!

சென்னையின் பல்வேறு பகுதிகளில் சனிக்கிழமை(நவ.2) காலை பரவலாக மழை பெய்து வருகிறது.

DIN

சென்னையின் பல்வேறு பகுதிகளில் சனிக்கிழமை(நவ.2) காலை பரவலாக மழை பெய்து வருகிறது.

சென்னையின் சென்ட்ரல், எழும்பூர், அமைந்தகரை, கோயம்பேடு, தியாகராய நகர், மாம்பலம், கோடம்பாக்கம், வளசரவாக்கம், வடபழனி உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.

மன்னாா் வளைகுடா, அதையொட்டிய பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் பல இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் சனிக்கிழமை (நவ.2) முதல் நவ.7-ஆம் தேதி வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

தமிழகத்தில் சனிக்கிழமை (நவ.2) நீலகிரி, கோவை உள்ளிட்ட 19 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், சென்னை மற்றும் புறநகா் பகுதிகளில் நவ.2, 3 ஆகிய தேதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

அதன்படி, சென்னையின் பல்வேறு பகுதிகளில் சனிக்கிழமை காலை பரவலாக மழை பெய்து வருகிறது.

அம்பத்தூர், அண்ணாநகர், அசோக் நகர், வடபழனி, கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், வள்ளூவர்கோட்டம், பெரம்பூர், திருவொற்றியூர், மணலி, மாதவரம் அம்பத்தூர், அண்ணாநகர் உள்ளிட்ட சென்னையில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அஞ்சு வண்ணப் பூவே... அனன்யா!

அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது!

வெள்ளி நகைகளை வைத்து இனி கடன் பெறலாம்! முழு விவரம்

குழந்தைகளுக்கு விருது இல்லையா? பிரகாஷ் ராஜிடம் 12 வயது குழந்தை நட்சத்திரம் காட்டம்!

இன்றும் விலை குறைந்த தங்கம் விலை!

SCROLL FOR NEXT