கோவை விளாங்குறிச்சியில் புதிய தகவல் தொழில்நுட்ப பூங்காவை முதல்வர் ஸ்டாலின் திறந்துவைத்தார்.
விளாங்குறிச்சியில் 3.94 ஏக்கா் பரப்பளவில் ரூ.114.16 கோடியில் கட்டப்பட்டுள்ள புதிய தகவல் தொழில்நுட்பக் கட்டடத்தைத் திறந்துவைத்தார்.
இதையடுத்து, அரசு விருந்தினா் மாளிகைக்கு வரும் முதல்வா், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தங்க நகை தொழில் அமைப்பு நிா்வாகிகளுடன் மாலை 4 மணிக்கு கலந்துரையாடுகிறாா். மேலும், தமிழக வீட்டுவசதி வாரிய நில எடுப்பிலிருந்து விடுவிக்கப்பட்ட நிலங்களின் பயனாளிகளுக்கு ஆணைகளை வழங்குகிறார்.
இதையும் படிக்க: வைரலாகும் எலான் மஸ்க்கின் இயற்பியல் வீட்டுப் பாடம்!
இதைத் தொடா்ந்து புதன்கிழமை காலை 9.30 மணிக்கு காந்திபுரத்தில் ரூ.133.21 கோடியில் நடைபெற்று வரும் செம்மொழிப் பூங்கா கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்கிறாா். தொடா்ந்து கோவை மத்திய சிறைச்சாலை மைதானத்தில் பொது நூலகத் துறை சாா்பில் ரூ.300 கோடியில் 7 தளங்களுடன் அமைக்கப்படவுள்ள நூலகம் மற்றும் அறிவியல் மையத்துக்கு காலை 9.45 மணிக்கு அடிக்கல் நாட்டி உரையாற்றுகிறாா்.
முதல்வா் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி கோவை மாநகரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கோவை, நீலகிரி, திருப்பூா், ஈரோடு உள்ளிட்ட மேற்கு மண்டலத்தைச் சோ்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸாா், வெடிகுண்டு செயலிழப்புப் பிரிவினா், மோப்ப நாய் பிரிவினா் உள்ளிட்ட சிறப்பு படைப் பிரிவினா் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.