மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்த பெரு நாட்டு கால்பந்து வீரர் மின்னல் பாய்ந்ததில் பரிதாபமாக பலியானார்.
தென் அமெரிக்காவின் மேற்கில் உள்ள நாடான பெருவில் உள்ள சிறிய நகரமான ஆண்டீன் நகரத்தில் நடைபெற்ற கால்பந்து போட்டியில் மின்னல் தாக்கியதில் வீரர் ஒருவர் காயமடைந்து மைதானத்திலேயே சுருண்டு விழுந்து பலியானார். மேலும், இந்தச் சம்பவத்தில் அவருடன் விளையாடிக் கொண்டிருந்த 7 பேர் காயமடைந்தனர்.
பெருவின் தலைநகர் லிமாவிலிருந்து கிழக்கே 310 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள சில்காவில் உள்ள உள்ளூர் அதிகாரிகள், 39 வயதான ஜோஸ் டி லா குரூஸ், தனது அணியான ஃபேமிலியா சோக்கா மற்றும் ஜுவென்டுட் பெல்லாவிஸ்டா இடையேயான போட்டியின் போது மின்னல் தாக்கியதால் இறந்ததாகக் கூறினர்.
இதையும் படிக்க..:டெஸ்ட் தரவரிசைப் பட்டியல்: ரிஷப் பந்த், கில் முன்னேற்றம்! விராட் கோலி, ரோகித்துக்கு சரிவு!
மைதானத்தில் மின்னல் தாக்கியதும் கள நடுவர்கள் போட்டியை நிறுத்தி அனைவரையும் வெளியேறச் செய்தனர். கால்பந்து வீரர் மீது மின்னல் தாக்குவது மற்ற வீரர்கள் மயக்கமடைவது போன்றக் காட்சிகள் விடியோவில் பதிவாகியுள்ளன.
மின்னல் தாக்கும் போது அனைவரும் மைதானத்தை விட்டு வெளியே ஓடினர். அப்போது கால்பந்து வீரர் டி லா குரூஸ் மீது நேரடியாக மின்னல் பாய்ந்தது. அவருடன் சேர்த்து மற்ற 7 வீரர்களும் மைதானத்தில் மயக்கமடைந்து விழுந்தனர்.
மைதானத்தில் மின்னல் பாய்ந்து காயமடைந்தவர்கள் ஜுனின் பகுதிக்குள்பட்ட தலைநகரான ஹுவான்கயாவில் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிக்க..:ரஞ்சி கோப்பையில் வரலாற்று சாதனை படைத்த கேரள வீரர்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.