கோப்புப்படம் 
தற்போதைய செய்திகள்

சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

அடுத்த 2 நாள்களுக்கு கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

DIN

அடுத்த 2 நாள்களுக்கு சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தனியார் வானிலை ஆராய்ச்சியாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்திருப்பதாவது:

இன்றிலிருந்து(நவ. 6) சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்கள் முதல் டெல்டா மாவட்டங்கள் வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதேபோல், ராமாநாதபுரம், தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் நவ. 8 முதல் மழை ஆரம்பிக்கும்.

வங்கக்கடலில் புதிய காற்றாழுத்தத் தாழ்வு நிலை உருவாகியுள்ளதால், கடலோர மாவட்டங்களில் மழை பெய்வதற்கான நேரம் வந்துவிட்டது. அதாவது சென்னை, புதுச்சேரி, கடலூர் முதல் ராமேஸ்வரம் வரை அடுத்த இரண்டு நாள்களுக்கு மழை பெய்யும். வரும் வெள்ளிக்கிழமை முதல் தென் தமிழகத்தில் மழை தொடங்கும்.

அடுத்த 2 நாள்களுக்கு சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், புதுச்சேரி, கடலூர், காரைக்கால், நாகை மண்டலங்களில் மழை பெய்யக்கூடும்.

ராமாநாதபுரம் - தூத்துக்குடி தென்தமிழக கடலோர மாவட்டங்களில் நவ. 8 முதல் மழை பெய்யும். ஒருசில இடங்களில் கனமழையும், மற்ற இடங்களில் மிதமான மழை வரை பெய்ய வாய்ப்புள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிவகார்த்திகேயன் பாடியுள்ள தாய் கிழவி பட முதல் பாடல்!

செஞ்சுரி பிளைபோர்ட்ஸ் 3வது காலாண்டு நிகர லாபம் ரூ. 65 கோடியாக உயர்வு!

ஸ்பானிஷ் கோப்பையில் அரையிறுதிக்கு முன்னேறிய நடப்பு சாம்பியன் பார்சிலோனா!

சண்முக பாண்டியனின் கொம்புசீவி படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி!

பவன் கல்யாணின் உஸ்தாத் பகத் சிங் வெளியீட்டுத் தேதி!

SCROLL FOR NEXT