கோவை கே.என்.ஜி.புதூர், ஐஸ்வர்யா கார்டன் பகுதியில் மண் சாலையை தார் சாலையாக அமைப்பது தொடர்பாக பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, அந்த பகுதி மக்களிடம் குறைகளை கேட்டு அறிந்த தலைமைச் செயலாளர் முருகானந்தம் 
தற்போதைய செய்திகள்

கோவையில் மக்களிடம் குறைகளை கேட்டு நேரில் ஆய்வு செய்த தலைமைச் செயலாளர்

கோவையில் மக்களிடம் குறைகளை கேட்டு வளர்ச்சித் திட்ட பணிகளை தலைமைச் செயலாளர் முருகானந்தம் புதன்கிழமை நேரில் ஆய்வு செய்தார்.

DIN

கோவையில் மக்களிடம் குறைகளை கேட்டு வளர்ச்சித் திட்ட பணிகளை தலைமைச் செயலாளர் முருகானந்தம் புதன்கிழமை நேரில் ஆய்வு செய்தார்.

கோவை வடவள்ளி, பி.என்.புதூர், கே.என்.ஜி புதூர், சேரன் நகர் பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் முன்னிலையில் தலைமைச் செயலாளர் முருகானந்தம் புதன்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம், வடவள்ளி, பி.என்.ஆர். நகர் பகுதியில் பாதாள சாக்கடை திட்டத்திற்காக தோண்டப்பட்ட சாலைகள் கான்கிரீட் கலவை மூலமாக சீரமைக்கப்பட்டதை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட பின்னர், கே.என்.ஜி.புதூர், ஐஸ்வர்யா கார்டன் பகுதியில் மண் சாலையை தார் சாலையாக அமைப்பது தொடர்பாக பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, அந்த பகுதி மக்களிடம் குறைகளை கேட்டு அறிந்தார்.

அதனைத் தொடர்ந்து மேற்கு மண்டலம் வார்டு எண்.17-க்கு உட்பட்ட சேரன் நகர் பகுதியில் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய சிக்கன அடிப்படையில் இணையத்தின் வாயிலாக சுமார் 400 வீடுகளுக்கு குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருவதை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, குடிநீர் வழங்கப்படும் முறைகள் குறித்து மக்களிடம் கேட்டறிந்தார்.

பின்னர், மத்திய மண்டலம், காந்திபுரம் நேரு வீதி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள புதிய தார் சாலையினை தலைமைச் செயலாளர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வுகளின்போது, மாநகராட்சி அதிகாரிகள், மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெங்களுரூ: காலணிக்குள் இருந்த பாம்பு கடித்து மென்பொறியாளர் பலி !

சென்சார் சவால்கள்! படத் தயாரிப்பைக் கைவிடும் வெற்றி மாறன்!

அமெரிக்காவில் நடுவானில் மோதிக் கொண்ட சிறிய ரக விமானங்கள்! ஒருவர் பலி

ராகுல் அனைத்து மக்களிடமிருந்தும் ஆதரவைப் பெறுகிறார்: அஜய் ராய்!

விஜய்யுடன் கூட்டணியா? - ஓபிஎஸ் பதில்

SCROLL FOR NEXT