தற்போதைய செய்திகள்

கவனம் ஈர்க்கும் கங்குவா படத்தின் புதிய பாடல்!

வெளியானது கங்குவா படத்தின் மன்னிப்பு பாடல்.

DIN

கங்குவா படத்தின் புதிய பாடல் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

சூர்யா - சிவா கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் கங்குவா. இப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றதால், இப்படத்தின் மேல் பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

நவம்பர் 14 ஆம் தேதி வெளியாகும் இப்படத்தின் இறுதிகட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

சூர்யாவுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை திஷா படானியும் வில்லனாக பாபி தியாலும் நடித்துள்ளனர்.

படத்தை ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். 3டியில் உருவாகும் இந்தப் படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி உட்பட 10 மொழிகளில் வெளியாக உள்ளது.

இந்த நிலையில், கங்குவா படத்தின் புதிய பாடலான மன்னிப்பு எனத் தொடங்கும் பாடலை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இப்பாடலுக்கான வரிகளை விவேகா எழுதியுள்ளார். ரகு தீக்‌ஷித் பாடியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புகையில்லா போகி: ஆட்சியா் கோரிக்கை

ஊராட்சிச் செயலா்களின் தொடா் வேலைநிறுத்தத்தால் பணிகள் பாதிப்பு

சமத்துவ பொங்கல் விழா

அம்மன் தாலி செயின் திருடிய இருவா் கைது

விஜய்யிடம் பொங்கலுக்குப் பின் மீண்டும் விசாரணை!

SCROLL FOR NEXT