மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ரஜினிகாந்த் சகோதரர் சத்தியநாராயண ராவ். 
தற்போதைய செய்திகள்

விஜய்யை தமிழக மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்: சத்தியநாராயண ராவ்

தமிழக மக்கள் நடிகர் விஜய்யை அரசியலில் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.விஜயகாந்தை மக்கள் ஏற்றுக்கொண்டது போல் அவரை ஏற்றுக் கொள்வார்களா?

DIN

மதுரை: தமிழக மக்கள் நடிகர் விஜய்யை அரசியலில் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.விஜயகாந்தை மக்கள் ஏற்றுக்கொண்டது போல் அவரை ஏற்றுக் கொள்வார்களா? என்பதை மக்களிடம் தான் கேட்க வேண்டும். அதே சமயம் ரஜினிகாந்துக்கு தேர்தலில் போட்டியிடும் எண்ணம் இல்லை என ரஜினிகாந்த் அண்ணன் சத்தியநாராயண ராவ் தெரிவித்தார்.

தமிழக திரையுலகில் நடிகா் ரஜினிக்கு அடுத்து அதிக ரசிகா்களைக் கொண்ட நடிகரான விஜய், தமிழக வெற்றிக் கழகத்தை (தவெக) ஓராண்டுக்கு முன்பே தொடங்கி, விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே வி.சாலையில் தவெக-வின் முதல் மாநில மாநாட்டை வெற்றிகரமாக நடத்தியிருப்பதும், லட்சக்கணக்கில் தொண்டா்களை திரட்டியதும் மிகப்பெரிய பேசுபொருளாக மாறியுள்ளது.

இந்த சூழலில், அரசியலில் நடிகர் விஜயை தமிழக மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என ரஜினிகாந்த் அண்ணன் சத்தியநாராயண ராவ் தெரிவித்தார்.

மதுரையில் ரஜினி ரசிகர் பால் தம்புராஜ் இல்ல நிகழ்விற்கு வருகை தந்த ரஜினியின் அண்ணன் சத்திய நாராயண ராவ் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.

பின்னவர் அவர் செய்தியாளர்களுடன் பேசினார்.

அப்போது, தமிழக மக்கள் நடிகர் விஜய்யை அரசியலில் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.விஜயகாந்தை மக்கள் ஏற்றுக்கொண்டது போல் அவரை ஏற்றுக் கொள்வார்களா? என்பதை மக்களிடம் தான் கேட்க வேண்டும். அதே சமயம் ரஜினிகாந்துக்கு தேர்தலில் போட்டியிடும் எண்ணம் இல்லை என சத்தியநாராயண ராவ் தெரிவித்தார்.

மேலும் நடிகர் விஐய்யை தமிழக மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். அதேசமயம் விஜய்க்கு அரசியல் அனுபவம் இல்லை. அவர் அரசியலுக்கு வருவதால் அவருக்கு வீண் சிரமம்தான் ஏற்படக்கூடும். எனவே அரசியலில் இருந்து அவரை நீங்களே விலகச் சொல்லுங்கள். அளவுக்கு அதிகமான செலவுகள் ஏற்படும் என்றார்.

ரஜினிகாந்துக்கு அரசியல் எண்ணம் இல்லை

ரஜினிகாந்துக்கு அரசியலுக்கு வரும் எண்ணம் இல்லை. எனவே அந்த கேள்விகளை தயவு செய்து தவிர்த்து விடுங்கள் என தெரிவித்தார்.மேலும் விஜயகாந்தை மக்கள் ஏற்றுக் கொண்டார்கள் அதேபோல் விஜயை ஏற்றுக்கொள்வார்களா என செய்தியாளர்களின் கேள்விக்கு மக்களிடம் தான் கேட்க வேண்டும் என அவர் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஸ்ரீராம் ஃபைனான்ஸ் பங்குகள் 4% உயர்வு!

இவ்வளவு நபர்கள் முகவரி இல்லாமல் இருந்திருக்கிறார்களா? ப.சிதம்பரம்

97 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்! விளக்கிய தமிழக தலைமை தேர்தல் அதிகாரி Archana Patnaik!

தேநீர் விருந்தளித்த மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா

கோடக் மஹிந்திரா வங்கிக்கு ரூ.62 லட்சம் அபராதம் விதிப்பு!

SCROLL FOR NEXT