கோப்புப்படம் 
தற்போதைய செய்திகள்

புதுகை மீனவர்கள் 11 பேருக்கு தலா 2 ஆண்டுகள் சிறை! - இலங்கை நீதிமன்றம்

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கைதான 11 புதுக்கோட்டை மீனவர்களுக்கு தலா 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து இலங்கை நீதிமன்றம் உத்தரவு.

DIN

புதுக்கோட்டை: எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கைது செய்யப்பட்ட 11 புதுக்கோட்டை மீனவர்களுக்கு தலா 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இவர்களுடன் மீன்பிடிக்கச் சென்ற 4 மீனவர்கள் முதல்முறையாக கைது செய்யப்பட்டவர்கள் என்பதால் அவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த அக். 9 ஆம் தேதி புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து சென்ற 11 பேரையும், கோட்டைப்பட்டினம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற 4 பேரையும் என மொத்தம் 15 மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கைக் கடற்படையினர் கைது செய்தனர். இவர்களுடன் 3 விசைப்படகுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

இவர்கள் மீதான விசாரணை முடிவடைந்ததைத் தொடர்ந்து இலங்கை நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீர்ப்பளித்தது.

இதில், ஜெகதாப்பட்டினம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற ரவீந்தர் (42), உலகநாதன் (38), அருள்நாதன் (29), வைத்தியநாதன் (30), குமரேசன் (37), மதன் (27), மகேந்திரன் (20), முனிவேல் (66), விஜய் (31), கோட்டைப்பட்டினம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற சிவகுமார் (28), கருப்பசாமி (26) ஆகிய 11 பேருக்கும் தலா 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், இவர்களுடன் சென்றிருந்த விக்னேஷ் (18), மகேஷ் (55), சூரியா (23), சூரியபிரகாஷ் (25) ஆகிய 4 பேரும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

தண்டனை விதிக்கப்பட்டவர்கள் ஏற்கெனவே ஒரு முறை கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டவர்கள். விடுவிக்கப்பட்டவர்கள் முதல் முறையாகக் கைது செய்யப்பட்டவர்கள் ஆவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமைதி திரும்புமா காஸாவில்?

இந்திய வீடுகளில் ரூ.337 லட்சம் கோடி மதிப்பிலான நகைகள்

இன்று 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

பெங்களூரில் பலத்த மழை: குடியிருப்புகளை சூழ்ந்தது வெள்ளம்

முதல்வா் பதவியை அடைய அவசரப்படவில்லை: கா்நாடக துணை முதல்வா் டி.கே.சிவகுமாா்

SCROLL FOR NEXT