அமைச்சர் மா. சுப்பிரமணியன் செய்தியாளர் சந்திப்பு 
தற்போதைய செய்திகள்

யூடியூபர் இர்ஃபான் செய்தது கொலை குற்றம் அல்ல: அமைச்சர் மா. சுப்பிரமணியன்

யூடியூபர் இர்பான் விவகாரம் தொடர்பாக அமைச்சர் மா. சுப்பிரமணியன்.

DIN

யூடியூபர் இர்பான் விவகாரத்தில் அவருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. அவர் செய்தது கொலை குற்றமில்லை என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

கோயம்புத்தூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ. 13 கோடி மதிப்பில் 2-வது எம்.ஆர்.ஐ. ஸ்கேன் கருவியினை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடக்கி வைத்தார்.

பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், கோவை அரசு மருத்துவமனையில் 13 கோடி செலவில் இரண்டாவது எம்.ஆர்.ஐ. ஸ்கேன் கருவி இன்று பயன்பாட்டுக்கு வந்துள்ளது.

வழக்கமாக ஒரு ஸ்கேன் எடுக்க 40 நிமிடங்கள் ஆகும். புதிய எம்.ஆர்.ஐ. ஸ்கேன் மூலம் 20 நிமிடத்திற்குள் எடுக்க முடியும்.

நேற்று(நவ. 11) மாலையில் 4 மையங்களில் திடீர் சோதனை நடத்தப்பட்டது. இரண்டு மருத்துவமனைகளில் மருத்துவர்கள் இருந்தனர். இரண்டு இடங்களில் மருத்துவர்கள் இல்லாமல் இருந்தது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு பணம் தராமல் இழுப்பறி செய்யும் ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் உள்ளிட்ட எந்த இன்சூரன்ஸ் நிறுவனங்கள் மீதும் புகார் இருந்தால் அது குறித்து நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

கோவை அரசு மருத்துவமனையில் அமரர் ஊர்திகள் அனைத்தும் செயல்பாட்டில் இருக்கின்றது. கோவை அரசு மருத்துவமனைக்கு 4500 பேருக்கும் அதிகமாக வருகின்றனர்.

யூடியூபர் இர்பான் விவகாரத்தில் அவருக்கு நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது. அவர் செய்தது கொலை குற்றமில்லை. அவர் செய்தது பெரிய விஷயமில்லை.

தனியார் மருத்துவமனை 10 நாள்கள் மூடப்பட்டது. 50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மருத்துவமனை மீது போலீஸ் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. அவர்கள்தான் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாருங்கள்...

சிறுமியை திருமணம் செய்தவா் மீது போக்சோ வழக்கு

2-ஆவது இன்னிங்ஸில் 400 ரன்களை நூலிழையில் தவறவிட்ட இந்தியா: அபார முன்னிலை!

‘லிப்ட்’ கேட்பது போல நடித்து இளைஞரிடம் பைக் திருட்டு

ஓணக் களிப்பில்... மோக்‌ஷா!

SCROLL FOR NEXT