டாஸ்மாக் (கோப்புப்படம்) 
தற்போதைய செய்திகள்

டாஸ்மாக் கடைகளில் ரசீது வழங்கும் முறை தொடக்கம்!

டாஸ்மாக் கடைகளில் டிஜிட்டல் முறையில் விற்பனை தொடர்பாக...

DIN

காஞ்சிபுரம், செங்கல்பட்டில் உள்ள டாஸ்மாக் கடைகளில் மதுப்பாட்டில்களுக்கு டிஜிட்டல் முறையில் ரசீது வழங்கும் நடைமுறை இன்றுமுதல்(நவ. 15) தொடங்கப்பட்டுள்ளது.

தமிழகத்திலுள்ள டாஸ்மாக் கடைகளில் முறைகேடாகக் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதையும் இரவு மற்றும் விடுமுறை காலங்களிலும் கள்ளத்தனமாக மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதையும் தடுக்கும் வகையில் மதுபான விற்பனையை டிஜிட்டல் மயமாக்க டாஸ்மாக் நிா்வாகம் முடிவு செய்து, இதற்காக ரூ.294 கோடி ஒதுக்கியுள்ளது.

தமிழகத்திலுள்ள அனைத்துக் கடைகளிலும் இந்த வசதியைக் கொண்டு வருவதற்கான ஆரம்பக்கட்ட பணிகள் தற்போது தொடங்கியுள்ள நிலையில், முதல்கட்டமாக பரிசோதனை அடிப்படையில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் இன்றுமுதல் தொடங்கப்பட்டுள்ளது.

இந்த நடைமுறை வியாழக்கிழமை முதல் அமலுக்கு வரும் என்று முன்னதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், பழைய மதுபானங்கள் இருப்பில் இருந்ததால், புது மதுபாட்டில்களை விற்பனைக்கு கொண்டுவந்த பின்னரே, இந்த திட்டம் இன்றுமுதல் தொடங்கப்பட்டுள்ளது.

க்யூஆர் கோடு வசதி அறிமுகம்

மதுப்பிரியா்கள் இந்த மது பாட்டில்களை வாங்கும்போது, அதனுடன் அதற்கான ரசீதும் வழங்கப்படும். அதில் பதிவு செய்யப்பட்டுள்ள பணத்தை மட்டும் செலுத்தினால்போதும். கூடுதல் கட்டணம் கொடுக்க தேவையில்லை. இதற்கு ஜிபே உள்ளிட்ட செயலிகள் மூலம் பணம் அனுப்பும் வசதியும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.

மது பாட்டில்களை வாங்கிய பிறகு, அதிலுள்ள க்யூஆா் கோடு கைப்பேசியில் ஸ்கேன் செய்து பாா்த்தாலே அதன் முழு தகவல்களைத் தெரிந்துகொள்ளலாம்.

அதே நேரத்தில், மதுக்கடைகளில் உள்ள ஊழியா்களின் நடவடிக்கைகளையும் கண்காணிப்பு கேமரா மூலம் சென்னையில் உள்ள தலைமை அலுவலகத்திலிருந்து கண்காணிக்கும் வகையிலும் புதிய வசிதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அவ தான் என்னவ... 🌹🌹😘 கௌரி கிஷன்

இந்தியா வருகிறார் தலிபான் அரசின் வெளியுறவு அமைச்சர்!

கொஞ்சும் எழிலிசையே.. அனு!

பாஜகவின் தூண்டுதலில் விஜய் அரசியலுக்கு வந்துள்ளார் - திருமா | Vck | TVK | Karur

திமுகவிற்கும் விஜய்க்கும் Underground dealing ஆ? - திருமா | TVK | VCK | Karur

SCROLL FOR NEXT