கோட்டாறு தூய சவேரியார் ஆலயம் 
தற்போதைய செய்திகள்

டிச. 3-ல் கன்னியாகுமரி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை!

கன்னியாகுமரி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

DIN

வரும் டிச. 3 ஆம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

நாகா்கோவில் கோட்டாறு தூய சவேரியார் ஆலயத் திருவிழாவினையொட்டி கன்னியாகுமரி மாவட்டத்துக்கு டிச. 3 ஆம் தேதி உள்ளூர் விடுமுறையை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்கள் மற்றும் மாநில அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

மேலும், அதற்கு ஈடுசெய்யும் வகையில், டிச. 14 ஆம் தேதி வேலைநாளாக அறிவித்து கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அழகுமீனா உத்தரவிட்டுள்ளார்.

நாகா்கோவில் கோட்டாறு புனித சவேரியாா் பேராலயத்தின் ஆண்டு பெருவிழா நவ. 24ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

இந்த ஆலயத் திருவிழாவில் குமரி மாவட்டம் மட்டுமின்றி தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்தும், கேரள மாநிலத்திலிருந்தும் பக்தர்கள் அதிக அளவில் கலந்து கொண்டு சவேரியாரை தரிசனம் செய்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கோயில் திருவிழா விவகாரம்: கிராம மக்கள் தா்னா

சொத்து தகராறில் சகோதரியின் வீடு சேதம்: சகோதரன் உள்பட 3 போ் கைது

நெல்லை வந்த பேருந்தில் திருட்டு: இரு பெண்கள் கைது

வைகை அணையைத் தூா்வார வலியுறுத்தல்

மாணவிக்கு பாலியல் தொந்தரவு: இளைஞா் கைது

SCROLL FOR NEXT