முகப்பு
தற்போதைய செய்திகள்

மெட்டி ஒலி இயக்குநரின் புதிய தொடர் படப்பிடிப்பு தொடக்கம்!

இயக்குநர் திருமுருகனின் புதிய தொடர் தொடர்பாக...

Updated On : 20 நவம்பர் 2024, 6:20 pm IST
பகிர்:

மெட்டி ஒலி இயக்குநர் திருமுருகன் இயக்கும் புதிய தொடரின் படப்பிடிப்பு நடைபெற்று வருவதாக தகவல் தெரியவந்துள்ளது.

2002ஆம் ஆண்டு முதல் 2005 வரை ஒளிபரப்பான 'மெட்டி ஒலி' தொடரில் கோபி பாத்திரத்தில் நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தவர் திருமுருகன். இவர் இத்தொடரை இயக்கியும் இருந்தார்.

இவருக்கு சின்னத்திரையில் கிடைத்த வரவேற்பையடுத்து, தமிழ் சினிமாவிலும் தனது வெற்றியைப் பதிவு செய்தார்.

Advertisement

Advertisement

நடிகர் பரத் நடிப்பில் உருவான 'எம்-மகன்' திரைப்படத்தை இயக்கி, தமிழக அரசின் விருத்தைப் பெற்றார். மீண்டும் பரத்துடன் இணைந்து 'முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு' என்ற படத்தையும் இயக்கினார்.

மெட்டி ஒலியைத் தொடர்ந்து, இவர் இயக்கிய நாதஸ்வரம், கல்யாண வீடு, தேனிலவு, குலதெய்வம் தொடர்கள் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தது. இவரின் குறும்படங்கள், யூடியூப் தொடர்களும் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

இயக்குநர் திருமுருகன் புதிய தொடரொன்றை இயக்கவுள்ளதாக, அவரின் யூடியூப் சேனாலான திரு டிவியின் மூலம் கடந்த தமிழ் புத்தாண்டு அன்று அறிவித்து இருந்தார்.

இந்த நிலையில், இவர் இயக்கும் புதிய தொடரின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளதாகத் தகவல் தெரியவந்துள்ளது.

புதிய தொடரானது, மெட்டி ஒலி தொடரின் இரண்டாம் பாகமாக இருக்குமா அல்லது புதிய யூடியூப் தொடராக இருக்குமா என்று ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.