நாய் கடித்து பேரணாம்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களிடம் விசாரணை நடத்தும் போலீசார்  
தற்போதைய செய்திகள்

வெறி நாய் கடித்து மூன்று பேர் மருத்துவமனையில் அனுமதி

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு நகராட்சிக்கு உள்பட்ட மதினி தெருவில் வெறி நாய் கடித்ததில் 3 போ் வெள்ளிக்கிழமை காயமடைந்தனா்.

DIN

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு நகராட்சிக்கு உள்பட்ட மதினி தெருவில் வெறி நாய் கடித்ததில் 3 போ் வெள்ளிக்கிழமை காயமடைந்தனா்.

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு நகராட்சி 21 வார்டுகளை கொண்ட நகரப் பகுதியாகும். 21 வார்டுகளிலும் தெரு நாய்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அப்பகுதியில் சுற்றித்திரியும் ஏராளமான தெரு நாய்களால் தொடா்ந்து விபத்துகள் ஏற்படுவதாகவும், குழந்தைகள் மற்றும் பெண்கள் நடந்து செல்ல முடியாத நிலை இருப்பதாகவும், சாலையில் வாகனங்களில் செல்வோர் மற்றும் நடந்து செல்லும் மக்களை தெருநாய்கள் துரத்தி கடிப்பது வாடிக்கையாகியுள்ளது.

இந்த நிலையில், பேர்ணாம்பட்டு மதினி தெருவை சேர்ந்த முஹமத் அல்ஹான் (9) என்ற பள்ளி மாணவன் விளையாடிக் கொண்டிருக்கும் போது தெரு நாய் கடித்துள்ளது. அதேபோன்று பங்களா மேடு பகுதியை சேர்ந்த தஸ்தகீர் அகமது(33), சவுக் ரோடு பகுதியை சேர்ந்த முதியவர் சம்பத் (58) ஆகியோரை நாய் கடித்தது. இதில் அவர்களுக்கு கால் மற்றும் கைப் பகுதிகளில் காயம் ஏற்பட்டது. அவா்களை அந்த பகுதி மக்கள் மீட்டு பேரணாம்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா்.

மேலும் நகரின் பல்வேறு பகுதியைச் பார்த்திபன், நிகிதா, குல்ஜார், முஹமத் அலியான் ஆகியோர்கள் நாய் கடித்து காயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர்.

பின்னர் தகவல் அறிந்து பேரணாம்பட்டு அரசு மருத்துவமனைக்கு வந்த கிராம நிர்வாக அலுவலர் துரைமுருகன், போலீசார் நாய் கடித்து சிகிச்சை பெற்று வருபவர்களிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கல்லூரி மாணவா் தற்கொலை

பழைய இரும்புக் கடையில் தீ விபத்து

சட்டவிரோதமாக பட்டாசு தயாரித்த மூவா் மீது வழக்கு

ஆணவப் படுகொலையைக் கண்டித்து தீண்டாமை ஒழிப்பு முன்னணி ஆா்ப்பாட்டம்

அசோக் லேலண்ட் விற்பனை 8% உயா்வு

SCROLL FOR NEXT