சுமத்ரா தீவில் நிலச்சரிவு: சுற்றுலாப் பயணிகள் 9 பேர் பலி
இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் பெய்த கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கிய சுற்றுலாப் பேருந்தில் இருந்து மேலும் இரண்டு உடல்களை மீட்புப் படையினர் மீட்டுள்ளனர்.
இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் பெய்த கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கிய சுற்றுலாப் பேருந்தில் இருந்து மேலும் இரண்டு உடல்களை மீட்புப் படையினர் மீட்டுள்ளனர். இதையடுத்து பலி எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இதுவரை சுமத்ரா தீவில் ஏற்பட்ட நிலச்சரிவுக்கு 27 பேர் இறந்துள்ளனர்.
இந்தோனேசியாவின் சுமத்ரா தீவப் பகுதிகளில் கடந்த சில நாள்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் வடக்கு சுமத்ரா பகுதியில் உள்ள மேடான் நகரத்தில் இருந்து மற்ற மாவட்டங்களுக்கு செல்லும் முக்கிய பாதையான பெரஸ்டாகி நகர் செல்லும் சாலையில் புதன்கிழமை நிலச்சரிவு ஏற்பட்டது.
இதில், சுற்றுலாப் பேருந்து மீது மரங்கள், மண் மற்றும் பாறைகளால் மூடப்பட்ட பேருந்தில் இருந்த 7 சடலங்களை மீட்புக் குழுவினர் மீட்டுள்ளதாக அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனர். பத்துக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்ததாகவும், அவர்கள் மேடான் நகரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என தகவல்கள் வெளியானது.
Advertisement
இதையும் படிக்க | உக்ரைன் ‘அதிகார மையங்கள்’ மீது தாக்குதல்: புதின் எச்சரிக்கை
இந்த நிலையில், சுமத்ரா தீவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இறந்தோரின் எண்ணிக்கை 27 ஆக அதிகரித்துள்ளதாகவும், நிலச்சரிவில் பல வாகனங்கள் சிக்கியுள்ளதாகவும், மேலும் பல இடங்களில் மரங்கள் விழுந்து கிடப்பதால், அந்த இடங்களிலிருந்து வாகனங்களையும பயணிகளையும் வெளியே கொண்டுவர முடியவில்லை. அவர்களை மீட்பதற்கு குறைந்தது இரண்டு நாட்கள் ஆகும். காணாமல் போனவர்களை தேடும் பணியில் மீட்புப் படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த வாரத்தின் தொடக்கத்தில் வடக்கு சுமத்ரா மாகாணத்தின் மத்ரா தீவுப்பகுதியில் நான்கு இடங்களில் ஏற்பட்ட திடீர் நிலச்சரிவு மற்றும் வெள்ளத்திற்கு 20 பேர் இறந்துள்ளனர்.
17 ஆயிரம் தீவுகளைக் கொண்ட தீவுக்கூட்டமான இந்தோனேசியாவில் அக்டோபர் முதல் மார்ச் வரையிலான பருவகால மழையால் அடிக்கடி வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளை ஏற்படுத்தி வருகிறது. இது 17,000 தீவுகளைக் கொண்ட தீவுக்கூட்டமாகும், அங்கு லட்சக்கணக்கான மக்கள் மலைப்பகுதிகளில் அல்லது வளமான சமவெளி பகுதிகளுக்கு அருகில் வசித்து வருகின்றனர்.