தேவர் மகன் படத்தில் சிவாஜி - கமல். 
தற்போதைய செய்திகள்

நடிப்புக் கலையின் உச்சம்... சிவாஜி பிறந்த நாளுக்கு கமல் புகழாரம்!

பிரமிக்க வைக்கும் சாதனைகளைச் செய்துகாட்டியவரை பிறந்த நாளில் வணங்குகிறேன்.

DIN

மறைந்த நடிகர் சிவாஜி கணேசனின் பிறந்த நாளுக்கு, மக்கள் நீதி மய்யம் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக நடிகர் கமல்ஹாசன் தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில், “காலங்கள் மாறலாம், தொழில் நுட்பங்கள் கூடலாம், சினிமாவின் முகமே மாற்றத்துக்கு இலக்காகியிருக்கலாம்.

ஆனால், நடிப்புக் கலையின் உச்சம் என்பது எப்படி இருக்கும் என்று காட்டிய மாபெரும் கலைஞன் சிவாஜி சாரின் பங்களிப்பு மறக்கவொண்ணாதது. பிரமிக்க வைக்கும் சாதனைகளைச் செய்துகாட்டியவரை பிறந்த நாளில் வணங்குகிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

மறைந்த நடிகர் சிவாஜி கணேசனின் பிறந்த நாளுக்கு திரைப்பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் தங்களது வாழ்த்துகளை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

செல்வம் சேரும் சிம்மத்துக்கு: தினப்பலன்கள்!

சாத்தான்குளத்தில் தொழிலாளிக்கு வெட்டு

அடிப்படை வசதிகள் கோரி வீடுகளில் கருப்புக் கொடியேற்றி போராட்டம்

மயிலாடுதுறையில் ஆசிரியா்களுக்கு விருது

எலப்பாக்கம்-ஆனைகுனம் சாலையை சீரமைக்க கோரிக்கை

SCROLL FOR NEXT