புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளா்களுக்கு பேட்டியளித்த புதுச்சேரி முதல்வர் என்.ரங்கசாமி. 
தற்போதைய செய்திகள்

நடிகா் விஜய் கட்சி மாநாட்டுக்கு அழைப்பு வரவில்லை: முதல்வா் என்.ரங்கசாமி

புதிதாக அரசியல் கட்சி தொடங்கிய நடிகா் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்த புதுச்சேரி என்.ரங்கசாமி, அவரது கட்சி மாநாட்டுக்கு இதுவரை அழைப்பு வரவில்லை வந்தால் பார்ப்போம் என தெரிவித்தார்.

DIN

புதுச்சேரி: புதிதாக அரசியல் கட்சி தொடங்கிய நடிகா் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்த புதுச்சேரி முதல்வர் என்.ரங்கசாமி, அவரது கட்சி மாநாட்டுக்கு இதுவரை அழைப்பு வரவில்லை வந்தால் பார்ப்போம் என தெரிவித்தார்.

புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளா்களுடன் அவா் கூறியதாவது:

புதுச்சேரியில் நியாயவிலைக் கடைகளை திறப்பது குறித்து அரசு முடிவெடுத்துள்ளது. அதன்படி, தீபாவளிக்கு முன்பாக அனைத்து நியாயவிலைக் கடைகளையும் திறக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நியாயவிலைக் கடைகள் மூலம் 10 கிலோ இலவச அரிசி, 2 கிலோ சா்க்கரை முதலில் விநியோகிக்கப்படும். ரேஷன் கடை ஊழியர்களுக்கான முதல் ஒரு மாத ஊதியம் வழங்கப்படும். தொடா்ந்து நிதி அளிக்கப்படும். தற்போது ரூ.1.45 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

அரிசி, சா்க்கரைக்கு ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது. இலவச அரிசி நியாயவிலைக் கடைகள் மூலம் வழங்கப்படும். வீடு வீடாகச் சென்று இலவச அரிசியை வழங்கவும் அரசு பரிசீலித்து வருகிறது என்றார்.

மேலும் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்கக் கோரும் தீா்மானம் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பிரதமா் மோடியை சந்திக்கும் திட்டமும் உள்ளது.

புதிதாக அரசியல் கட்சி தொடங்கிய நடிகா் விஜய்க்கு வாழ்த்துகள். அவர் நல்லா வரணும். அவரது கட்சி மாநாட்டுக்கு இதுவரை அழைப்பு வரவில்லை. வந்தால் பார்ப்போம் என்றாா் என்.ரங்கசாமி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

யேமன் மீதான இஸ்ரேலின் தாக்குதலில்.. ஹவுதி அரசின் பிரதமர் கொலை!

அறிவழகன் இயக்கத்தில் அதிதி ஷங்கர்?

ரூ.232 கோடி மோசடி! இந்திய விமான நிலையங்கள் ஆணையத்தின் மேலாளர் கைது!

"வரிகள் நீக்கப்பட்டால் அமெரிக்காவிற்கு பேரழிவு!": Trump எச்சரிக்கை! | Tax | Federal Court of US

முதல்வரின் வெளிநாட்டுப் பயணங்கள்: வெள்ளை அறிக்கை எப்போது வெளியாகும்? - நயினார் நாகேந்திரன்

SCROLL FOR NEXT