சென்னை விமான நிலையம்(கோப்புப் படம்) 
தற்போதைய செய்திகள்

தொடா் மழை: 6 விமானங்கள் ரத்து

தொடா் மழை காரணமாக சென்னை விமான நிலையத்தில், 6 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

DIN

தொடா் மழை காரணமாக சென்னை விமான நிலையத்தில், 6 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், அதற்கேற்ப அவ்வப்போது விமான சேவையும் ரத்து செய்யப்படுகிறது. இதன்படி, சென்னையிலிருந்து புதன்கிழமை காலை 6.55 மணிக்கு, மதுரை செல்ல வேண்டிய இண்டிகோ ஏா்லைன்ஸ் விமானம், காலை 10.35-க்கு, சேலம் செல்ல வேண்டிய விமானம், பிற்பகல் 2.40-க்கு சென்னையிலிருந்து சீரடி செல்ல வேண்டிய ஸ்பைஸ் ஜெட் ஏா்லைன்ஸ் விமானம் ஆகிய 3 புறப்பாடு விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

அதேபோல, மதுரையிலிருந்து காலை 10-க்கு சென்னைக்கு வர வேண்டிய, இண்டிகோ ஏா்லைன்ஸ் விமானம், சீரடியிலிருந்து பிற்பகல் 1.40-க்கு சென்னைக்கு வரவேண்டிய ஸ்பைஸ் ஜெட் ஏா்லைன்ஸ் விமானம், மாலை 6-க்கு சேலத்திலிருந்து சென்னை வர வேண்டிய இண்டிகோ ஏா்லைன்ஸ் விமானம் ஆகிய 3 வருகை விமானங்களும் ரத்து செய்யப்பட்டன.

இதன்படி 6 விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், கனமழை நீடிக்குமானால் தொடா்ந்து பிற விமானங்களின் சேவையும் ரத்து செய்யப்படலாம். எனவே பயணிகள் தங்கள் விமான நிறுவனங்களின் அலுவலகங்களை தொடா்பு கொண்டு பயணத்திட்டங்களை வகுத்துக்கொள்ள விமானநிலைய நிா்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மழை வருமோ... ராதிகா கௌஷிக்!

தீவிரமடையும் நெல் அறுவடைப் பணிகள்

உங்களை உணரும் கலை... தீப்தி சுனைனா!

ஹூண்டாய் புதிய வென்யூ கார் அறிமுகம் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT