கோப்புப்படம் 
தற்போதைய செய்திகள்

தனியார் செல்போன் ஷோரூம் தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை சோதனை

சென்னையில் தனியார் செல்போன் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் விற்பனை ஷோரூம் தொடர்புடைய இடங்களில் வருமானவரித் துறை அதிகாரிகள் வியாழக்கிழமை காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.

DIN

சென்னை: சென்னையில் தனியார் செல்போன் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் விற்பனை ஷோரூம் தொடர்புடைய இடங்களில் வருமானவரித் துறை அதிகாரிகள் வியாழக்கிழமை காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.

தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, கர்நாடக, மகாராஷ்டிரம் உள்ளிட்ட மாநிலங்களில் 400-க்கும் மேற்பட்ட ஷோரூம் கிளைகளுடன் தனியாருக்கு சொந்தமான செல்போன் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் விற்பனை ஷோரூம் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் ஆயிரகணக்கானோர் பணிபுரிந்து வருகின்றனர்.

இந்த நிலையில், வரி ஏய்ப்பு புகாரின் அடிப்படையில் அந்த நிறுவனத்தின் உரிமையாளர் யுவராஜ்-க்கு சொந்தமான கோடம்பாக்கத்தில் உள்ள வீடு, பல்லாவரம், பள்ளிக்கரணை உள்பட பல்வேறு இடங்களில் சோதனை நடைபெறுவதாக கூறப்படுகிறது.

சோதனை நிறைவடைந்த பிறகே கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்து தகவல் வெளியிடப்படும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மல்லிக காந்தா... ராஷி கண்ணா!

ஜாடையில் மயங்கி... ஐஸ்வர்யா மேனன்!

ஆசையில் தொடங்கி... ருக்மிணி வசந்த்!

வங்கதேசத்தை வீழ்த்துமா ஆப்கானிஸ்தான்? 155 ரன்கள் இலக்கு!

மலபார் ராகம்... ஆன் ஷீத்தல்!

SCROLL FOR NEXT