தற்போதைய செய்திகள்

சீனு ராமசாமியின் கோழிப்பண்ணை செல்லதுரை: ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

கோழிப்பண்ணை செல்லதுரை ஓடிடி வெளியீட்டுத் தேதி...

DIN

கோழிப்பண்ணை செல்லதுரை படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தென்மேற்கு பருவக்காற்று, தர்மதுரை போன்ற வெற்றிப் படங்களை இயக்கி ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றவர் இயக்குநர் சீனு ராமசாமி.

இயக்குநர் சீனு ராமசாமி  ‘கோழிப்பண்ணை செல்லதுரை’ என்ற புதிய படத்தை இயக்கியுள்ளார். அண்ணன் - தங்கை உறவைப் பேசும் படமாக உருவாகியுள்ள இப்படம், கடந்த செப்.20 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

இப்படத்தில் அறிமுக நாயகன் ஏகன், யோகி பாபு மற்றும் புதுமுகங்கள் நடித்துள்ளனர். திரைவெளியீட்டு முன்பாகவே, ஆக்லாந்து சர்வதேச திரைப்பட விழாவில் தேர்வான முதல் தமிழ்ப்படம் என்கிற பெயரையும் இப்படம் பெற்றுள்ளது.

இந்த நிலையில், கோழிப்பண்ணை செல்லதுரை திரைப்படம் சிம்பிளி சவுத் ஓடிடி தளத்தில் வரும் அக். 24 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முதல்வா் ஸ்டாலின் படத்தை வைத்து ஆளுநரிடம் பட்டம் வாங்கிய மாணவா்!

தரமான நெல் விதைகளைக் கொள்முதல் செய்து வழங்கவேண்டும்: விதை ஆய்வுத்துறை வலியுறுத்தல்

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 1,000 கனஅடி

எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்த ஓபிஎஸ் ஆதரவாளா்கள்

எடப்பாடியில் இருந்து பழனிக்கு பாதயாத்திரை தொடங்கிய பக்தா்கள்

SCROLL FOR NEXT