முகப்பு
தற்போதைய செய்திகள்

விக்கிரவாண்டி நீதிமன்றத்தில் சீமான் ஆஜர்

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய வழக்கில் விக்கிரவாண்டி நீதிமன்றத்தில் சீமான் வெள்ளிக்கிழமை ஆஜரானார்.

Updated On : 18 அக்டோபர், 2024 at 7:12 AM
விக்கிரவாண்டி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வந்திருந்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.
பகிர்:

விழுப்புரம்: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய வழக்கில் விக்கிரவாண்டி நீதிமன்றத்தில் சீமான் வெள்ளிக்கிழமை ஆஜரானார்.

கடந்த 2019-ஆம் ஆண்டில் விக்கிரவாண்டி சட்டப் பேரவைத் தொகுதி இடைத்தேர்தலின் போது கஞ்சனூர் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட நேமூர் கிராமத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக சீமான் மீது காங்கிரஸ் கட்சியின் விழுப்புரம் வடக்கு மாவட்டத் தலைவர் ரமேஷ் விக்கிரவாண்டி உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார்.

இந்த வழக்கு மீதான விசாரணை விக்கிரவாண்டி நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அப்போது நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார்.

இதையடுத்து வழக்கு விசாரனையை நவம்பர் மாதத்துக்கு ஒத்திவைத்து நீதிபதி சத்யநாராயணன் உத்தரவிட்டார்.

முழு கட்டுரையைப் படிக்க →