FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தற்போதைய செய்திகள்

தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வாணைய தலைவர் நியமன வழக்கு: விசாரணை அக். 25-க்கு ஒத்திவைப்பு

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணைய தலைவராக ஓய்வுபெற்ற காவல்துறை தலைமை இயக்குநரை நியமித்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை வரும் 25 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Updated On : 18 அக்டோபர் 2024, 3:31 pm IST
கோப்புப்படம்
பகிர்:

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணைய தலைவராக ஓய்வுபெற்ற காவல்துறை தலைமை இயக்குநரை நியமித்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக வழக்குரைஞர் பிரிவு அணியினர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு மீதான வழக்கின் விசாரணையை வருகிற 25-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து, சென்னை உயர்நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வாணையத்தின் தலைவராக ஓய்வுபெற்ற காவல்துறை தலைமை இயக்குநா் சுனில்குமாரை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டிருந்து. இதுவரை பணியில் உள்ள காவல்துறை தலைமை இயக்குநா் நிலை அதிகாரிகள் மட்டுமே நியமிக்கப்பட்டு வந்த இந்தப் பணிக்கு, இதுவரை இல்லாத வகையில் ஓய்வுபெற்ற அதிகாரி ஒருவா் நியமிக்கப்பட்டதற்கு அதிமுக, பாமக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தது.

இந்த நிலையில் தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வாணையத்தின் தலைவராக ஓய்வுபெற்ற காவல்துறை தலைமை இயக்குநா் சுனில்குமார் நியமனம் செய்யப்பட்டதை எதிர்த்து அதிமுக சார்பில் வழக்குரைஞர் இன்பதுரை சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இதையடுத்து இந்த வழக்கில் தமிழ்நாடு அரசு 25 ஆம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதாக அதிமுக வழக்குரைஞர் பிரிவு வழக்குரைஞர் இன்பதுரை தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments