தீப்பிடித்து எரிந்த ஆம்னி கார் DIN
தற்போதைய செய்திகள்

சாலையில் திடீரென தீப்பிடித்து எரிந்த ஆம்னி கார்!

ஆம்னி கார் தீப்பிடித்து எரிந்தது! அதிர்ஷ்டவசமாக உயர் தப்பிய ஓட்டுநர்!

DIN

காட்பாடி அருகே ஆம்னி கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த கசம் பகுதியை சேர்ந்தவர் மளிகைக் கடை நடத்தி வரும் சிவராமன் (43). இவர் தனது ஆம்னி காரில் மளிகைக் கடைக்கு தேவையான பொருள்கள் வாங்க, கசம் பகுதியில் இருந்து சேர்காடு நோக்கி சென்றுள்ளார்.

அப்போது, கண்டிப்பேடு அருகே சென்றபோது காரில் இருந்து லேசாக புகை வந்துள்ளது.

இதனை அறிந்த சிவராமன் வேகமாக காரில் இருந்து இறங்கியுள்ளார். இதனைத் தொடர்ந்து, கார் தீப்பிடித்து எரியத் தொடங்கி முழுவதுமாக எரிந்து நாசமாகியுள்ளது.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த காட்பாடி தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர்.

இதுகுறித்து திருவலம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பெட்ரோல் மூலம் இயங்கும் ஆம்னி காரின் பேட்டரி பகுதியில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக காவல் துறையினரின் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தூய்மைப் பணியாளா்கள் பேரணி

பொருளாதார மேம்பாட்டுக்கு கடல்வழி வணிக ஊக்குவிப்பு அவசியம்: அமைச்சா் எ.வ.வேலு

என்.சி.சி. மாணவருக்கு பாராட்டு விழா

மானாமதுரை தெருக்களின் ஜாதி பெயா் அகற்ற முடிவு

சென்னை துறைமுகத்தில் ஹிந்தி தின கொண்டாட்டம்

SCROLL FOR NEXT