முதல்வர் ஸ்டாலினுடன் எலான் மஸ்க். படம்: எக்ஸ்
தற்போதைய செய்திகள்

முதல்வர் ஸ்டாலினுடன் எலான் மஸ்க்: வைரல் புகைப்படம்!

முதல்வர் ஸ்டாலினுடன் எலான் மஸ்க் சந்திப்பா?

DIN

எலான் மஸ்க் மற்றும் முதல்வர் ஸ்டாலின் இருவரும் சந்திப்பதைப் போன்ற ஏஐ புகைப்படத்தை இயக்குநர் வெங்கட் பிரபு பகிர்ந்துள்ளார்.

அமெரிக்காவுக்கு அரசுமுறை பயணமாக சென்றுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், கடந்த வாரம் சான்பிரான்சிஸ்கோ நகருக்குச் சென்றார். இதனைத் தொடர்ந்து, முதல்வர் செவ்வாய்க்கிழமை காலை சிகாகோ நகருக்கு சென்றடைந்தார்.

சிகாகோ விமான நிலையத்தில் முதல்வர் ஸ்டாலினுக்கு தமிழர்களின் பாரம்பரிய முறைப்படி ஆரத்தி எடுத்து அமெரிக்க வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். முதல்வருடன் தமிழக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா மற்றும் அரசு அதிகாரிகள் சென்றுள்ளனர்.

இதனிடையே, இயக்குநர் வெங்கட் பிரபு கஸ்டடி திரைப்படத்துக்குப் பிறகு விஜய்யின் 68-வது படமான ‘கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்ஸ்’ (G.O.A.T. - Greatest Of All Times) படத்தை இயக்கியுள்ளார். தற்போது, கோட் படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.

இந்த நிலையில், தமிழக முதல்வர் ஸ்டாலின், டெஸ்லா நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி எலான் மஸ்க் உடன் இருக்கும் செய்யறிவு(ஏஐ) மூலம் உருவாக்கப்பட்ட புகைப்படத்தை இயக்குநர் வெங்கட் பிரபு பகிர்ந்துள்ளார்.

இது தொடர்பாக வெங்கட் பிரபு தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில், “ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட இந்த புகைப்படம் உண்மையாக வேண்டும் என்று விரும்புகிறேன். டெஸ்லா நிறுவனம் தமிழகத்திற்கு வந்தால், அது நமது முதல்வரின் கோட் சாதனை” என்று குறிப்பிட்டுள்ளார்.

முதல்வர் ஸ்டாலின் மற்றும் எலான் மஸ்க் சந்திப்பதைப் போன்ற புகைப்படத்தை இயக்குநர் வெங்கட் பிரபு பகிர்ந்துள்ள நிலையில், இப்புகைப்படம் இணையத்தில் வைரலாகி உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கேரளத்தில் சிறுத்தையிடம் இருந்து 4 வயது மகனைக் காப்பாற்றிய தந்தை !

3 கோடி பார்வைகளைக் கடந்த பொட்டல முட்டாயே பாடல்!

வைல்ட் ஃபிளவர்... அமைரா தஸ்தூர்!

நயினார் நாகேந்திரனை ஓபிஎஸ் குற்றம் சொல்வதை ஏற்றுக்கொள்ள மாட்டோம்: தமிழிசை

மேட்டூரில் ஆடிப்பெருக்கு விழா: புனித நீராட குவிந்த மக்கள்!

SCROLL FOR NEXT