தனியார் கல்லூரியில் குட்டிகளுடன் புகுந்த காட்டு யானைகள் 
தற்போதைய செய்திகள்

தனியார் கல்லூரியில் குட்டிகளுடன் புகுந்த காட்டு யானைகள்: வனப்பகுதிக்குள் விரட்டிய வனத் துறையினர்!

தனியார் கல்லூரியில் குட்டிகளுடன் புகுந்த காட்டு யானைகளை நீண்ட போராட்டத்திற்குப் பிறகு வனப்பகுதிக்குள் விரட்டினர் வனத் துறையினர்.

DIN

கோவை: தனியார் கல்லூரியில் குட்டிகளுடன் புகுந்த காட்டு யானைகளை நீண்ட போராட்டத்திற்குப் பிறகு வனப்பகுதிக்குள் விரட்டினர் வனத் துறையினர்.

கோவை ஆலந்துறை அடுத்த நல்லூர்வயல், சடையாண்டி கோயில் அருகே உள்ள தனியார் கல்லூரி விடுதி அருகே குட்டிகளுடன் செவ்வாய்க்கிழமை புகுந்த 5-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் உள்ளே முகாமிட்டு இருந்தது.

இந்தநிலையில், இது குறித்து புதன்கிழமை மதுக்கரை வனத் துறையினருக்கு கல்லூரி நிர்வாகத்தினார் தகவல் கொடுத்தனர். அதனைத் தொடர்ந்து, அங்கு வந்த வனத்துறையினர் இரண்டு குழுக்களாக செயல்பட்டு காட்டு யானைகளை கல்லூரி வளாகத்தில் இருந்து வெளியே விரட்டினர்.

பின்னர் குடியிருப்புப் பகுதிக்குள் காட்டு யானைகள் செல்லாமல் இருக்க அதனை கண்காணித்து பின்னர் அடர்ந்த வனத்துக்குள் விரட்டினர். இருப்பினும் வனப் பகுதியில் இருந்து மீண்டும் காட்டு யானைகள் வரக் கூடும் என்பதால் அந்த பகுதியில் வனத் துறையினர் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மாநகராட்சிப் பகுதியில் குவிந்துள்ள குப்பைகளால் நோய் பரவும் அபாயம்

அரசுப் பேருந்து, காா்களை சேதப்படுத்தியதாக 7 போ் கைது

ஜி.கே. உலகப் பள்ளியில் பேட்மிண்டன் அகாதெமி திறப்பு

SCROLL FOR NEXT